"போட்றா வெடிய!"- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மரண மாஸ் ஆக்ஷனில் வந்த ஜெயிலர் SHOWCASE... மிரட்டலான வீடியோ இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் SHOWCASE வீடியோ வெளியீடு,Superstar rajinikanth in jailer showcase out now | Galatta

இந்திய சினிமா ரசிகர்கள் எக்கச்சக்கமான எதிர்பார்ப்போடு காத்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லராக மிரட்டலான ஜெயிலர் SHOWCASE வீடியோ வெளியானது. அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராகவும் கடந்த 48 ஆண்டுகளாக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் மகத்தான கலைஞனாகவும் திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது 70 களிலும் வரிசையாக அட்டகாசமான படங்களை கைவசம் வைத்திருக்கிறார். முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் மிக முக்கிய கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். குறிப்பாக தனது திரைப் பயணத்தில் 171 வது திரைப்படமாக உருவாகும் தலைவர் 171 திரைப்படத்தில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்க இருப்பதாக தெரிகிறது. இந்த தலைவர் 171 திரைப்படத்தின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். அதற்கு முன்னதாக தனது 170-வது திரைப்படமாக ஜெய் பீம் படத்தில் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. 

கடந்த ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. ரிலீசுக்கு இன்னும் எட்டு நாட்களே இருப்பதால் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த நிலையில் ஓட்டு மொத்த ரசிகர்களுக்கும் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மரண மாஸ் ஸ்டைலில் ஜெயிலர் திரைப்படத்தின் ட்ரெய்லராக ஜெயிலர் SHOWCASE வீடியோ தற்போது வெளியானது. ஏற்கனவே ஜெயிலில் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் செம்ம ஸ்டைல் இயக்குனர் நெல்சனின் வழக்கமான டார்க் காமெடி மிரள வைக்கும் அதிரடி ஆக்சன் நட்சத்திர பட்டாளம் என  ஸஏதற்போது வெளிவந்திருக்கும் இந்த மிரட்டலான ஜெயிலர் ஷோகேஸ் வீடியோ இன்னும் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. ரசிகர்களை பிரமிக்க வைத்த சூப்பர் ஸ்டாரின் பக்கம் மாஸ் ஜெயிலர் SHOWCASE வீடியோ இதோ…
 

புது மாப்பிள்ளையாக காதலியை கரம் பிடிக்கும் கவின்... மணமகள் யார்? திருமணம் எப்போது?- அசத்தலான தகவல்கள் இதோ!
சினிமா

புது மாப்பிள்ளையாக காதலியை கரம் பிடிக்கும் கவின்... மணமகள் யார்? திருமணம் எப்போது?- அசத்தலான தகவல்கள் இதோ!

'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!
சினிமா

'விடாமுயற்சி'க்கு முன் அஜித்குமார் தனது வெளிநாட்டு பைக் ரைடிங்கை தொடங்கினார்... ஷாலினி பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ!

சினிமா

"தனியா ரூம்ல இருக்க பயப்படுவாறு!"- இதுவரை வெளிவராத தனுஷின் ஆரம்ப கட்ட திரைப்பயண நினைவுகள்! சுப்பிரமணியம் சிவாவின் ட்ரெண்டிங் வீடியோ