“எங்க அண்ணன் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார்..” அதிரடியாக பதிலளித்த நடிகர் பிரபு.! – வைரல் வீடியோ உள்ளே..

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகர் பிரபு கருத்து வீடியோ உள்ளே - Actor Prabhu about Super star title issue Rajinikanth Thalapathy Vijay | Galatta

சமீப காலமாக தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதே.. பல தசாப்தங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டதுடன் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராக ரஜினிகாந்த் இருந்து வருகிறார். இதையடுத்து அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை சமீபத்தில் எழுந்தது. . அந்த வரிசையில் அஜித், விஜய் என இரு பெரும் நட்சத்திரங்களின் பெயர் ரசிகர்கள் மத்தியில் பரிந்துரையாக பேசப்பட்டது. இதில் விஜய் பெயர் அதிகளவில் பேசப்பட்டு வந்தது.

கடந்த ஜூலை 28ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது, அதில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார். மேலும் வழக்கமான குட்டி கதையுடன் பல சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.  அதை தொடர்ந்து ரஜினி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் இளைய திலகம் பிரபு அவர்கள் ஒரு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் அவரிடம் பான் இந்திய திரைப்படங்கள் அதிகம் வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அது ரொம்ப சந்தோஷமான விஷயம் தான். இப்போ ஒடிடியில் வரும் திரைப்படங்கள் அனைத்தும் அனைத்து மொழிகளிலும் வருகிறது. மார்கெட் பெரியதாக மாறியது. அது ஆரோக்கியமான விஷயம். தென்னிந்தியாவில் இருந்து வரும் திரைப்படங்களை வட இந்தியாவில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்." என்றார் நடிகர் பிரபு.

அதை தொடர்ந்து தளபதி விஜய் அரசியல் வருவது குறித்து கேட்கையில், “தம்பி வரட்டுமே.. அவர் சமூகத்திற்கு எதவாது பண்ணனும் னு நினைக்குறாரு.. வந்தா சந்தோஷம் தான்.” என்றார் பிரபு.

பின்னர், அவரிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கேட்கையில், “எங்க அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. மற்ற நடிகர்கள் எல்லாம் சூப்பர் நடிகர்கள். ரஜினி சார் என்ன சொல்லிருக்கிறார்  நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்கிறார். ரஜினி சார் வழிவிடுகிறார். ரஜினி சார்  சூப்பர் ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் தான்.. மற்ற நடிகர்கள் எல்லா சூப்பர் நடிகராக இருந்து சூப்பர் ஸ்டாராக வரட்டும்.. வந்தால் சந்தோஷம் தான். தேவர் மகன் படத்தில் அந்த சீட் போனதுக்கு அப்பறம் சின்ன தேவர் வந்து உட்காருவார். விஜயும் இருக்காரு. அஜித்தும் இருக்காரு, அவங்கவுங்க லெவலுக்கு எங்க நிற்க முடியுமோ அங்கே இருக்கட்டும்” என பதிலளித்தார். சூப்பர் ஸ்டார் பட்டத்தின் பின் தொடரும் சர்ச்சைகள் தொடர்ந்து இணையத்தில் ரசிகர்களிடையே மிகபெரிய பேசு பொருளாக மாறி வருகிறது. இந்நிலையில் இளைய திலகம் பிரபு அவர்கள் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 

வித்யாசமான திரில்லர் கதையில் மிரட்டும் பிரபு தேவா.! ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘WOLF’ பட டீசர்..
சினிமா

வித்யாசமான திரில்லர் கதையில் மிரட்டும் பிரபு தேவா.! ரசிகர்களை கவர்ந்து வைரலாகும் ‘WOLF’ பட டீசர்..

“மாமன்னனை கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இது தான்.” வசீகரிக்கும் குரலில் வடிவேலு பாடும் வீடியோவை பகிர்ந்த மாரி செல்வராஜ்..
சினிமா

“மாமன்னனை கண்டுணர்ந்த பாடலும் பயணமும் இது தான்.” வசீகரிக்கும் குரலில் வடிவேலு பாடும் வீடியோவை பகிர்ந்த மாரி செல்வராஜ்..

 அசத்தலான Combo is Back.. மீண்டும் சிபிராஜுடன் கைகோர்த்த சத்யராஜ்.. ‘ஜாக்சன் துரை 2’ படக்குழு வெளியிட்ட முதல் பார்வை இதோ..
சினிமா

அசத்தலான Combo is Back.. மீண்டும் சிபிராஜுடன் கைகோர்த்த சத்யராஜ்.. ‘ஜாக்சன் துரை 2’ படக்குழு வெளியிட்ட முதல் பார்வை இதோ..