சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் "ஜெயிலர் SHOWCASE!"- ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த மிரட்டலான அறிவிப்பு இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட மிரட்டலான அறிவிப்பு,Superstar rajinikanth in jailer showcase update | Galatta

முதல் முறை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த மிரட்டலான அறிவிப்பு ஒன்று வெளியாகிருக்கிறது. ஓட்டு மொத்த இந்திய சினிமா சினிமா ரசிகர்களுக்கு மிகப் பிடித்த நடிகராகவும் என்றென்றும் சூப்பர் ஸ்டாராகவும் திகழும் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தலைவர் 171 படத்தில் இணைய இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்த கேள்விக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து தான் அறிவிப்பு வரவேண்டும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தெரிவித்ததால் இந்த கூட்டணி இணைவது உறுதியானது என ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திஈஏஈருக்கின்றனர்.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தீன் பாய் எனும் மிக முக்கிய கௌரவ தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். இதனை அடுத்து ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்க உருவாகும் தலைவர் 170 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இதனிடையே கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்ததது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. இயக்குனர் நெல்சனின் தனி ஸ்டைலில் டார்க் காமெடி மற்றும் அதிரடி ஆக்சன் கலந்த பக்கா எண்டர்டெய்னர் படமாக ஜெயிலர் திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த ஜூலை 28ஆம் தேதி ஜெயலலிதா திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளி வந்திருக்கிறது. ஜெயிலர் SHOWCASE நாளை முதல் எனக் குறிப்பிட்டு மிரட்டலான ஒரு போஸ்டரோடு இந்த புதிய அறிவிப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. எனவே இது கட்டாயமாக ட்ரெய்லராக தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சன் பிக்சர்ஸின் இந்த புதிய அறிவிப்பு தற்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது அட்டகாசமான அந்த அறிவிப்பு இதோ…
 

Late ah vandhalum latest ah varuvom… The wait is over! It's time for his arrival😎 #JailerShowcase Releasing Tomorrow 💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabupic.twitter.com/BobmFJ4oGV

— Sun Pictures (@sunpictures) August 1, 2023

மார்க் ஆண்டனி, D50 தொடர்ந்து செல்வராகவனின் அடுத்த ப்ராஜெக்ட்… ‘புஷ்பா’ சுனில், யோகி பாபு இணைந்த புதிய பட Shooting Spot புகைப்படங்கள்!
சினிமா

மார்க் ஆண்டனி, D50 தொடர்ந்து செல்வராகவனின் அடுத்த ப்ராஜெக்ட்… ‘புஷ்பா’ சுனில், யோகி பாபு இணைந்த புதிய பட Shooting Spot புகைப்படங்கள்!

சினிமா

"பெரிய ஸ்டார் படமாக இருந்தாலும் கூட..!"- தற்போதைய சினிமாவின் ட்ரெண்ட் குறித்து தமன்னாவின் தரமான பதில்! வீடியோ இதோ

சினிமா

"என் கரியரிலேயே சிறந்த பாடல்"- கார்த்தியின் ஜப்பான் படத்தில் பாடிய முன்னணி இசை அமைப்பாளர்... ஜீவி பிரகாஷின் மாஸ் அப்டேட் இதோ!