"இந்த தடவ மிஸ் ஆகாது!"- தளபதி விஜயின் வாரிசு பட OST ரிலீஸ் தேதியை அறிவித்த இசையமைப்பாளர் தமன்! உற்சாகத்தில் ரசிகர்கள்

தளபதி விஜயின் வாரிசு பட OST ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்,thalapathy vijay in varisu movie ost release date announcement by thaman | Galatta

தளபதி விஜய் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த வாரிசு திரைப்படத்தின் OST டிராக்களை வெளியிடும் ரிலீஸ் தேதியை இசையமைப்பாளர் தமன் பக்ரிந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாகவும் இந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்களின் அபிமான ஹீரோவாகவும் வலம் வரும் தளபதி விஜய் இதுவரை தனது திரைப் பயணத்திலேயே எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது 67-வது திரைப்படமாக தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார்.

 மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கப்பட்டு தொடரந்து விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த சில தினங்களுக்கு முன் முற்றிலுமாக நிறைவடைந்தது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்க, தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்  பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்தீவ் தாமஸ் மற்றும் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.  அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார். முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். முன்னதாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் OST ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேட்டபோது, OST ட்ராக்குகளை கடந்த ஜூலை மாதத்திற்குள் வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார்.ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி OST ட்ராக்குகள் வெளிவராததால் தற்போது இதற்கு மீண்டும் பதில் அளித்திருக்கும் இசையமைப்பாளர் தமன், "மக்களே வாரிசு 100% வரும் இதில் 25 ட்ராக்குகள் இருக்கின்றன. அதில் பணியாற்றி வருகிறேன் தாமதமாவதற்கு காரணம் தற்போது கையில் இருக்கும் மற்ற வேலைகள் தான். என் இதயத்தை வைத்து உங்களுக்கு முழு அன்போடு அதை நான் வழங்க வேண்டும். எனக்கு தெரியும் நான் தாமதமாக்கிவிட்டேன், ஆனால் இந்த முறை தவறாது. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி நிச்சயமாக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். இசையமைப்பாளர் தமனின் அந்த பதிவு இதோ…
 

Guys #VarisuOst is 100 % coming it has more than 25 Solid tracks .. I am working on it . Delay is due to ongoing commitments. I have to put my heart ❤️ and send it with love to u all !!

I knw I have delayed it but this time I Will Not miss it ❗️#Aug15th i will surely Release…

— thaman S (@MusicThaman) July 31, 2023

சினிமா

"என் கரியரிலேயே சிறந்த பாடல்"- கார்த்தியின் ஜப்பான் படத்தில் பாடிய முன்னணி இசை அமைப்பாளர்... ஜீவி பிரகாஷின் மாஸ் அப்டேட் இதோ!

சினிமா

"விஜயின் தளபதி 68 படத்தில் இணைகிறாரா?"- தமன்னாவின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ உள்ளே

சினிமா

"உங்களுக்கு யார் போட்டி?"- சுவாரஸ்யமான கேள்விக்கு தமன்னாவின் தரமான பதில்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!