"என் கரியரிலேயே சிறந்த பாடல்"- கார்த்தியின் ஜப்பான் படத்தில் பாடிய முன்னணி இசை அமைப்பாளர்... ஜீவி பிரகாஷின் மாஸ் அப்டேட் இதோ!

கார்த்தியின் ஜப்பான் பட முக்கிய அப்டேட் கொடுத்த ஜீவி பிரகாஷ்,gv prakash kumar shared a song update of japan karthi 25th movie | Galatta

நடிகர் கார்த்தி தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக நடித்துவரும் ஜப்பான் திரைப்படத்தின் பாடல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா மக்களின் மனம் கவர்ந்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தனது 26 ஆவது திரைப்படமாக தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட சூது கவ்வும் மற்றும் காதலும் கடந்து போகும் ஆகிய படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி அவர்களின் இயக்கத்தில் உருவாகும் #கார்த்தி26 திரைப்படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். இது குறித்து இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் அவரது 27 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. கடைக்குட்டி சிங்கம் மற்றும் விருமன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து கார்த்தியின் இந்த #கார்த்தி27 திரைப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இணைந்து நடித்த வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான 96 திரைப்படத்தின் இயக்குனர் பிரேம்குமார் தனது அடுத்த படைப்பாக இயக்கும் இந்த #கார்த்தி27 படத்தில் கார்த்தி உடன் இணைந்து அரவிந்த் சுவாமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.

இதனிடையே தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான். தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கார்த்தியின் திரைப்பயணத்திலேயே வித்தியாசமான திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்யும் ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்த நிலையில் கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஒரு பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஜூலை 31ம் தேதி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அவர்கள், ஜப்பான் படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இதனை அறிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜப்பான் படத்திற்காக சூப்பரான ஒரு போக் மெலடி பாடலில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அவர்களின் அட்டகாசமான குரலை பதிவு செய்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் பாடல் எனது கரியரிலேயே சிறந்த மெலடி பாடலாக இருக்கும். நன்றி ஷான் ரோல்டன்…” என பதிவிட்டு இருக்கிறார். இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமாரின் அந்த பதிவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Super happy to have recorded the stunning voice of @RSeanRoldan for a folk melody in #japan . Will be one of my career best Melodie’s . Thanks @RSeanRoldan

— G.V.Prakash Kumar (@gvprakash) July 31, 2023

கன்னடத்தில் கேஜிஎஃப் 2, தமிழில் லியோ வரிசையில் முதல் முறை சஞ்சய் தத் களமிறங்கும் திரையுலகம்... புதிய பட அதிரடி அறிவிப்பு!
சினிமா

கன்னடத்தில் கேஜிஎஃப் 2, தமிழில் லியோ வரிசையில் முதல் முறை சஞ்சய் தத் களமிறங்கும் திரையுலகம்... புதிய பட அதிரடி அறிவிப்பு!

'தியேட்டரில் பார்க்கும்போது பிடிக்காமல் போகலாம் ஆனால்..'- தனது UNDERRATED படங்கள் குறித்து பேசிய தமன்னா! ஸ்பெஷல் வீடியோ
சினிமா

'தியேட்டரில் பார்க்கும்போது பிடிக்காமல் போகலாம் ஆனால்..'- தனது UNDERRATED படங்கள் குறித்து பேசிய தமன்னா! ஸ்பெஷல் வீடியோ

ஷாரூக் கானின் அதிரடி நடனத்தில் ஜவான் பட முதல் பாடல்... வேற லெவல் சம்பவம் செய்த அனிருத்தின் அட்டகாசமான
சினிமா

ஷாரூக் கானின் அதிரடி நடனத்தில் ஜவான் பட முதல் பாடல்... வேற லெவல் சம்பவம் செய்த அனிருத்தின் அட்டகாசமான "வந்த எடம்" வீடியோ இதோ!