இறுதி கட்டத்தில் ஜீவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர்... படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட் இதோ!

ஜீவி பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷின் டியர் பட படப்பிடிப்பு நிறைவு,gv prakash kumar aishwarya rajesh in dear movie shoot wrapped | Galatta

ஜீவி பிரகாஷ் குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவலை பட குழு வெளியிட்டுள்ளது. இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தனக்கென தனி பாணியில் மிகச்சரியாக பயணம் செய்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் இந்த 2023ம் ஆண்டில் இதுவரை வாத்தி ருத்ரன்  காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் அநீதி  உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர், விஷாலின் மார்க் ஆண்டனி, இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் தங்கலான், இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் வாடிவாசல், கார்த்தியின் ஜப்பான், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21, அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே, வாத்தி பட இயக்குனருடன் துல்கர் சல்மான் இணையும் புதிய படம், ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ், கங்கணா ரணாவத்தின் எமர்ஜென்சி, ஜெயம் ரவியின் சைரன், தங்கர் பச்சானின் கருமகன்கள் கலைகின்றன மற்றும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் தயாராகி வருகின்றன. 

நடிகராகவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து இடிமுழக்கம், 13, கள்வன், அடியே , ரெபல் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. அதே போல் தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இந்த 2023 ஆம் ஆண்டில் இதுவரை தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா மற்றும் தீரா காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளிவந்திருக்கும் நிலையில், தொடர்ந்து விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடித்த மோகன்தாஸ், ஆக்சன் கிங் அர்ஜுனன் இணைந்து நடித்த தீயவர்கள் குலைகள் நடுங்க, நடிகர் டோவினோத் தாமசுடன் இணைந்து நடித்த அஜயன்டே ரண்டாம் மோக்ஷணம் மற்றும் புளிமடா & ஹெர் ஆகிய மலையாள படங்கள் உட்பட வரிசையாக அடுத்தடுத்த திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. 

இந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து ஜீவி பிரகாஷ் குமார் நடித்திருக்கும் திரைப்படம் தான் டியர். செத்தும் ஆயிரம் பொன் படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த டியர் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் ரூகேஷ் படத்தொகுப்பு செய்யும் டியர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர தயாராகி வரும் இந்த டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழுவினரோடு ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் இதோ…
 

The final clapper has fallen, but the memories will last forever! A massive thank you to the fantastic team that made it all possible. We can't wait to share this fun entertainer with the world! #DearMovieWrap @tvaroon #AbhishekRamisetty @gvprakash @aishu_dil @Anand_Rchandran pic.twitter.com/f66qaNb4oV

— Nutmeg Productions (@NutmegProd) August 1, 2023

சினிமா

"பெரிய ஸ்டார் படமாக இருந்தாலும் கூட..!"- தற்போதைய சினிமாவின் ட்ரெண்ட் குறித்து தமன்னாவின் தரமான பதில்! வீடியோ இதோ

சினிமா

"என் கரியரிலேயே சிறந்த பாடல்"- கார்த்தியின் ஜப்பான் படத்தில் பாடிய முன்னணி இசை அமைப்பாளர்... ஜீவி பிரகாஷின் மாஸ் அப்டேட் இதோ!

சினிமா

"விஜயின் தளபதி 68 படத்தில் இணைகிறாரா?"- தமன்னாவின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ உள்ளே