மார்க் ஆண்டனி, D50 தொடர்ந்து செல்வராகவனின் அடுத்த ப்ராஜெக்ட்… ‘புஷ்பா’ சுனில், யோகி பாபு இணைந்த புதிய பட Shooting Spot புகைப்படங்கள்!

செல்வராகவன் ‘புஷ்பா’ சுனில் இணைந்த புதிய பட Shooting Spot புகைப்படங்கள்,selvaraghavan sunil yogi babu in new movies hooting spot photos | Galatta

தமிழ் சினிமாவின்  குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில்  ரசிகர்களின் உணர்வுகளோடு பேசும் வகையிலான தரமான படைப்புகளை கொடுத்து  தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் இயக்குனர்  செல்வராகவன் . கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி அடுத்தடுத்து காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், NGK, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களை இயக்கிய, இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இயக்கத்தில் கடைசியாக கடந்த ஆண்டு(2022) தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க வெளிவந்த நானே வருவேன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் ஹிட் ஆனது. 

தரமான இயக்குனராக ரசிகர்களை மகிழ்வித்து வந்த இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் புது அவதாரம் எடுத்து தளபதி விஜயின் பீஸ்ட், இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் சாணிக் காகிதம் , ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா உள்ளிட்ட திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.  தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி வெளியிடாக விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன். அடுத்து நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமாக இயக்கி நடிக்கும் D50 திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விரைவில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் - 2 படத்தை செல்வராகவன் இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தையும் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. 

இதனிடையே நடிகராக தனது புதிய திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் தற்போது இணைந்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தில் செல்வராகவன் அவர்களுடன் இணைந்து  புஷ்பா படத்தில் வில்லனாகவும் மார்க் ஆண்டனி மற்றும் ஜெயிலர் ஆகிய திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கும் சுனில் மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் - இயக்குனர் ராஜீவ் மேனன் அவர்களின் மகள் சரஸ்வதி மேனன்  , ரம்யா பாண்டியன் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தை MOMENT ENTERTAINMENTS நிறுவனம் தயாரிக்கிறது.  திண்டுக்கல் மாவட்டத்தை கதைக்களமாக கொண்டு நகரும் இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் டைட்டில் மற்றும் இதர அறிவிப்புகள் அனைத்தும் விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய படப்பிடிப்பு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை பட குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த ஷூட்டிங் ஸ்பாட்   புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

@selvaraghavan @iYogiBabu @suneeltollywood from the sets of act in yet-untitled film

Directed by debutant #Ranganathan #Radharavi @Sarasmenon @iamramyapandian @onlynikil pic.twitter.com/ffsAGeekaU

— Moment Entertainments (@MomentEntertain) July 31, 2023

சினிமா

"விஜயின் தளபதி 68 படத்தில் இணைகிறாரா?"- தமன்னாவின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ உள்ளே

சினிமா

"உங்களுக்கு யார் போட்டி?"- சுவாரஸ்யமான கேள்விக்கு தமன்னாவின் தரமான பதில்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

கன்னடத்தில் கேஜிஎஃப் 2, தமிழில் லியோ வரிசையில் முதல் முறை சஞ்சய் தத் களமிறங்கும் திரையுலகம்... புதிய பட அதிரடி அறிவிப்பு!
சினிமா

கன்னடத்தில் கேஜிஎஃப் 2, தமிழில் லியோ வரிசையில் முதல் முறை சஞ்சய் தத் களமிறங்கும் திரையுலகம்... புதிய பட அதிரடி அறிவிப்பு!