ஏ ஆர் ரஹ்மான் ரசிகர்களே Vibe - க்கு ரெடியா.! மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படம் குறித்து வெளியான அட்டகாசமான அப்டேட்.. – விவரம் உள்ளே..

பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பை கொடுத்த ஏ ஆர் ரஹ்மான் - AR Rahman on Ponniyin selvan ost release announcement | Galatta

லைகா தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த ஆண்டு உலகமெங்கும் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு  இருந்து வந்தது அதன்படி சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார் மற்றும் பலர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது.

ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் பொன்னியின் செல்வன் முதல் பாகம் விமர்சனா ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடத்தில் உலகமெங்கும் இப்படம் வெளியாகி கொடிளை குவித்தது. கடந்த ஆண்டு வெளியானதில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் அடித்த திரைப்படங்களில் ஒன்றாக பொன்னியின் செல்வன் அமைந்தது.

இப்படத்தையடுத்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரம்மாண்டமாக வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்து இருந்தது. அதன்படி உலகளவில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் எதிர்பார்த்த படியே வெற்றி வாகை சூடி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பொன்னியின் செல்வன் படத்திற்கு இரண்டு பாகத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது இசை புயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை மற்றும் பாடல்கள் முதல் பாகத்தில் அமைந்த ‘பொன்னி நதி’ பாடல் ஒன்றே ஒரு பானை சோற்றுக்கு பதமாக அமைந்தது. பட்டி தொட்டி எங்கும் வைரலாகி பொன்னி நதி பாடல் ஹிட் அடிக்க இப்படத்திற்கு தனி விளம்பரமாக இப்பாடல் அமைந்தது. அதே போல் தான் இரண்டாம் பாகத்தில் அமைந்த ‘அகநக’ பாடல் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் இன்றுடன் பொன்னி நதி பாடல் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரசிகர்களை துள்ளல் போட வைத்த பொன்னி நதி பாடல் ஒரு ஆண்டு நிறைவு குறித்து அப்பாடலின் பாடலாசிரியர் சிவ இளங்கோ தனது முகநூல் பக்கத்தில்,

“பொன்னி நதி பாடல் வெளியாகி இன்றோடு ஓராண்டு ஆகிறது. எத்தனையோ இனிய நினைவுகள் மனதில் சுழல்கின்றன. இப்பாடல் எனக்கு உருவாக்கிக் கொடுத்த அடையாளமும் என்னைக் கொண்டு சேர்த்த உயரமும் மிகப் பெரிது. என் இருபதாண்டு கால இலக்கிய வாழ்வில் கிடைக்காத அங்கீகாரங்களை எல்லாம் என்னைக் காணச் செய்தது. என் பெயர் விண்ணிலும் காற்றிலும் எழுதப்பட்டது. மண்ணுலகு எங்கும் சென்று சேர்ந்தது. வாழ்வின் திசையிலக்குகள் மாறிப்போனது. புதிய கனவுகளைக் காண்பதற்கான ஆன்ம பலம் எனக்கு வந்தது. உண்மையில் கடந்த ஓர் ஆண்டில் உழைத்ததைப் போல முன்பு எப்போதும் உழைத்ததில்லை. எதிர்வரும் ஆண்டுகளில் இன்னமும் உழைக்க வேண்டும். இன்னமும் ஓட வேண்டும். எல்லோருக்கும் அன்பு...” என்று குறிப்பிட்டு அவருடைய மகிழ்ச்சியை தெரிவித்தது.

 

அவரை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் OST என்று இணையத்தில் அழைக்கப்படும் படத்தின் பின்னணி இசையை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து ஏ ஆர் ரஹ்மான் பகிர்ந்த்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

PS Score 🛤️ Enroute 🛣️ Part A 🎻 🎹 🪘

— A.R.Rahman (@arrahman) August 1, 2023

சந்தானத்திற்கு சரியான நேரத்தில் கை கொடுத்த ‘DD Returns’.. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்.!
சினிமா

சந்தானத்திற்கு சரியான நேரத்தில் கை கொடுத்த ‘DD Returns’.. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்.!

“தனுஷுக்கு மட்டுமல்ல விஜய், ரஜினிக்கும் இது தான் நடந்தது..” இயக்குனர் சுப்ரமணியம் சிவா பகிர்ந்த தகவல் – Exclusive Interview உள்ளே..
சினிமா

“தனுஷுக்கு மட்டுமல்ல விஜய், ரஜினிக்கும் இது தான் நடந்தது..” இயக்குனர் சுப்ரமணியம் சிவா பகிர்ந்த தகவல் – Exclusive Interview உள்ளே..

'D50'- க்கு அடுத்து நெல்சனுடன் கை கோர்க்கும் தனுஷ்? - உண்மையை உடைத்த இயக்குனர் சுப்ரமணியம் சிவா.. – Exclusive interview உள்ளே..
சினிமா

'D50'- க்கு அடுத்து நெல்சனுடன் கை கோர்க்கும் தனுஷ்? - உண்மையை உடைத்த இயக்குனர் சுப்ரமணியம் சிவா.. – Exclusive interview உள்ளே..