தளபதி விஜயின் லியோ பட அட்வான்ஸ் புக்கிங்கில் அதிரடி... ரிலீசுக்கு முன்பே UKவில் வேற லெவல் சாதனை! விவரம் இதோ

UKவில் தளபதி விஜயின் லியோ படைத்த புதிய சாதனை,thalapathy vijay in leo gets more theatres in uk for advance booking | Galatta

நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரித்து வரும் தளபதி விஜயின் லியோ படம் UKவில் அட்வான்ஸ் புக்கிங்கில் அதிரடியான புதிய சாதனை படைத்திருக்கிறது. இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தளபதி விஜய் இரண்டாவது முறை இணைந்திருக்கும் படம் தான் லியோ. ஏற்கனவே முதல் முறை இந்த கூட்டணி இணைந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது உருவாக்கி வரும் இந்த லியோ திரைப்படம் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி இருக்கிறது. அதன் மிக முக்கிய காரணங்களில் ஒன்று மாஸ்டர் படம் 50% லோகேஷ் படம் 50% தளபதி படம் என இருந்தது போல் அல்லாமல் இந்த முறை லியோ படம் 100% லோகேஷ் படமாக இருக்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தது தான்.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கும் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, அனிருத் இசையமைத்துள்ளார். 

லியோ படத்தின் இறுதி கட்டப் பணிகளும் மிரட்டலான VFX பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.  இதுவரை இந்திய சினிமாவில் என்று திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆறு வாரங்களுக்கு முன்பே UKவில் லியோ திரைப்படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தொடங்கப்பட்ட நிலையில், தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே 10000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுவரை 18,000+ மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருப்பதாகவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதால் அதிக திரைகளும் காட்சிகளும் மற்றும் திரையரங்குகளும் அதிகரிக்கப்படுவதாகவும் குறிப்பாக தெலுங்கு சினிமா ரசிகர்களுக்காக இன்னும் அதிகரிக்கப்படுவதாகவும் UKவில் லியோ திரைப்படத்தை வெளியிடும் அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த அதிரடியான அறிவிப்பு இதோ…
 

Power kick-u from our UK family! Over 18,000 tickets sold for #LEO. Cinemas are buzzing, and we're going to add more shows, screens, and theatres (especially for our Telugu cinema lovers)! 🤜🔥🧊

Words can't describe the love you've shown for #AhimsaEntertainment 🙏🏽 pic.twitter.com/8NBKPDpRUx

— Ahimsa Entertainment (@ahimsafilms) September 12, 2023