அதிர்ச்சியை ஏற்படுத்திய நடிகரும் இயக்குனருமான மாரிமுத்துவின் மறைவு... ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்த தமிழ் திரையுலக நட்சத்திரங்கள்!

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் இரங்கல்,tamil cinema industry celebrities condolences for marimuthu demise | Galatta

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வளம் வந்த மாரிமுத்து அவர்கள் திடீரென மாரடைப்பால் காலமானார். இன்று செப்டம்பர் ஒன்பதாம் தேதி ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மாரிமுத்து அவர்களின் மறைவுக்கு தமிழ் சினிமா பிரபலங்களும் நட்சத்திரங்களும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் மாரிமுத்து நடிப்பில் கடைசியாக, சமீபத்தில் வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகுந்த வருத்தமாக இருக்கிறது. உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் மாரிமுத்து சார்… உங்களோடு இருந்த தருணங்களை நினைத்துப் பார்க்கிறேன்.” என தனது இரங்கலை பதிவிட்டு இருக்கிறார்.

Saddened!! Rest in peace #Marimuthu sir ! Remembering the times with you… https://t.co/91zrxxep9U

— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) September 8, 2023

நடிகர் சிலம்பரசன்.TR தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரிமுத்து சார் இல்லை என்பதை கேட்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. அவரோடு இணைந்து பணியாற்றிய தருணங்களை நினைத்து பார்க்கிறேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்” என பதிவிட்டிருக்கிறார்.

Extremely saddened to hear that #Marimuthu sir is no more. Remembering the times we worked together. Condolences to the family.#RIPMarimuthu

— Silambarasan TR (@SilambarasanTR_) September 8, 2023


அதேபோல் கொம்பன் மற்றும் கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த நடிகர் கார்த்தி அவர்கள், “நேருக்கு நேர் திரைப்படத்தின் சமயத்தில் உதவி இயக்குனராக தான் மாரிமுத்து சாரை நான் பார்த்தேன். அவர் மிகவும் அனுபவமிக்க நடிகர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மிகவும் ரியலஸ்டிக்காக கொடுக்கும் அட்டகாசமான பெர்ஃபார்மர். அவருடைய இந்த திடீர் மரணம் மிகப்பெரிய ஷாக்கை கொடுத்திருக்கிறது. அவருடைய ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவித்திருக்கிறார்.

I’ve met #Marimuthu sir when he was an assistant Director in Nerukku Ner. He was a seasoned actor and a stunning performer who could present every character realistically. He was well read and a passionate cinema afficianado. His sudden passing away is a huge shock. Deepest…

— Karthi (@Karthi_Offl) September 8, 2023


நடிகர் மாரிமுத்து அவர்களின் நெருங்கிய நண்பரான எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “RIP 🙏  மாரிமுத்து என்கிற சேதுபதி” என பதிவிட்டுள்ளார்.

RIP 🙏 marimuththu alias Sethupathi https://t.co/94Esyp1cyu

— S J Suryah (@iam_SJSuryah) September 8, 2023


நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாழ்க்கை என்பது மிகவும் கணிக்க முடியாதது என்பதை இது மீண்டும் காட்டி இருக்கிறது. என் சக நடிகரும் சிறந்த மனிதரும் இயக்குனருமான மாரிமுத்து சார் இல்லை என்பது ஜீரணிக்க முடியாததாகவும் மிகவும் ஷாக்காகவும் இருக்கிறது. அவர் இயக்குனராக இருந்த காலத்தில் இருந்து வெர்சடைல்  நடிகராக மாறிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும். அவருடைய குடும்பத்திற்கு வலிமையையும் கொடுக்க வேண்டும் என்பதே கடவுளிடம் நான் வைக்கும் ஒரே பிராத்தனை. பேச முடியவில்லை இப்போது வரைக்கும் வார்த்தைகள் வரவில்லை #RIPMARIMUTHU”  என குறிப்பிட்டுள்ளார். 

Once again it shows life is very unpredictable. Shocking & unable to digest the fact that my fellow actor & a good human being & director Marimuthu Sir is no more.

Have known him since the time he was a Ditector & transforming into a versatile actor.

My only prayer to God today… pic.twitter.com/ULal27kZQR

— Vishal (@VishalKOfficial) September 8, 2023


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது. சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது. என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன் என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன். தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன். இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன். குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்” என தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம்… pic.twitter.com/aEuWcCbOWF

— வைரமுத்து (@Vairamuthu) September 8, 2023


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு தங்களது இரங்கலை பதிவு செய்துள்ளனர்.

#ripmarimuthu pic.twitter.com/S0SMDkLFFq

— VijaySethupathi (@VijaySethuOffl) September 8, 2023

RIP #Marimuthu sir pic.twitter.com/igeZC4qVTn

— aishwarya rajesh (@aishu_dil) September 8, 2023


நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், “இது பற்றி கேட்கவே ஷாக்காக இருக்கிறது சமீபகாலமாக அவரது பணிகளை பின்பற்றி வருகிறேன். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் மாரிமுத்து சார். அவரது குடும்பத்தாருக்கு எனது இரங்கல்.” என குறிப்பிட்டுள்ளார்

Shocking to hear about this 💔
Oflate been following a lot of his work
RIP sir 🙏🏻 #RIPMarimuthu sir
Condolences to his family pic.twitter.com/uYDMso4clj

— Shanthnu (@imKBRshanthnu) September 8, 2023


நடிகர் அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “மாரிமுத்து சார் உயிரிழந்த செய்து மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. நல்ல நடிகர் நல்ல மனிதர் விரைவில் போய்விட்டார். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும்.” என தெரிவித்திருக்கிறார்.

Shocking to hear the demise of #Marimuthu sir.. Nice actor & a person gone too soon.. My heartfelt condolences to his family. May his soul rest in peace..🙏🏽

— ArunVijay (@arunvijayno1) September 8, 2023


மாரிமுத்து அவர்களின் இயக்கத்தில் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பிரசன்னா அவர்கள், “டைரக்டர் மாரிமுத்து அவர்கள் உயிரிழந்த செய்தி அறிந்து நொறுங்கி போனேன். நாங்கள் இணைந்து கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய படங்கள் பணியாற்றினோம். எங்களுக்குள் சகோதரர்கள் போன்ற ஒரு இணைப்பு இருந்தது. அவருடைய வாழ்க்கை அவ்வளவு ஈசியாக இல்லை. கடைசியில் நடிகராக நன்றாக பணியாற்றி வந்தார். இன்னும் நீண்ட காலம் இவர் இருந்திருக்க வேண்டும். RIP போய்ட்டுவாப்பு💔!” என தன்னுடைய இடங்களை பதிவு செய்திருக்கிறார்.

Deeply shattered to know the passing away of director G Marimuthu. We did #KannumKannum and #Pulivaal together. We had a brothers like bond. We agreed to disagree on many. His life wasn't easy at all. As an actor finally he was doing very well. He shud've been there for a while… pic.twitter.com/KewaK2Gzxk

— Prasanna (@Prasanna_actor) September 8, 2023


நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள், “பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.(2-2) #Marimuthu pic.twitter.com/xneyDFnsBw

— Vijayakant (@iVijayakant) September 8, 2023


இன்னும் பல பிரபலங்களும் லட்சக்கணக்கான ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.