மாஸ் ஹீரோவாகவும் கிளாஸ் நடிகராகவும் அசத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! 31வது ஆண்டு விழாவில் ‘அண்ணாமலை’ – சிறப்பு கட்டுரை இதோ..

31 வது ஆண்டில் சூப்பர் ஸ்டாரின் அண்ணாமலை சிறப்பு கட்டுரை உள்ளே - Rajinikanth annamalai movie complete 31 years | Galatta

காலம் கடந்தும் சில படங்கள் அதே சுவாரஸ்யங்களுடன் ரசிகர்களுக்கு விருந்தளித்து கொண்டே இருக்கும். அப்படி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் திரைப்படமாக இருந்து வருவது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் ‘அண்ணாமலை’. இன்று ரசிகர்களால் 31 years of annamalai கொண்டாடப் பட்டு வருகிறது.

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான அண்ணாமலை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக குஷ்பூ நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சரத் பாபு, மனோரமா, நிழல்கள் ரவி, ரேகா, வினு சக்கரவர்த்தி, ராதாரவி, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பாலச்சந்தர் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம்  தயாரிப்பில் கடந்த 1992 ம் ஆண்டு ஜூன் 27ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இமாலய வெற்றியை பெற்றது.

பணக்கார நண்பன் சரத்பாபுவிடம் ஏழை பால்கார நாயகன் ரஜினிகாந்த் ஏமாந்த பின் தன் நண்பனை விட அதிகம் சொத்து சேர்த்து பணக்காரனாக மாறும் லட்சியத்தில் கதாநயாகன் இறங்குவார்.  இருவரது நட்புக்கு இடையே தொழில் ரீதியாக வரும் போட்டியை அடிப்படையாக திரைப்படத்தின் திரைக்கதை அமைந்திருக்கும். முதல் பாதியில் கலகலப்பாகவும்  இரண்டாம் பாதியில் லட்சிய நாயகனாக பல காட்சிகளில் மாஸ் கட்டியிருப்பார். குறிப்பாக நண்பனிடம் ஏமாற்றம் அடைந்து “என் பேர் அண்ணாமலை இல்லடா” என்று சவால் விடும் காட்சியிலும் சங்க தேர்தலில் பழைய தலைவராக அசோக் (சரத் பாபு) இருந்த இடத்தில் புதிய தலைவராக அண்ணாமலை (சூப்பர் ஸ்டார்) ஸ்டைலாக வந்து அமரும் காட்சிகளெல்லாம் காலம் கடந்து அதகளப் படுத்துபவை. ஸ்டைல் ததும்ப சூப்பர் ஸ்டார் வரும் காட்சிகளெல்லாம் இன்றும் விசில் பறக்கும். எந்தளவு மாஸ் ஹீரோவாக ரஜினி திரையில் தோன்றினாலும் கிளாஸ் நடிகனாகவும் படத்தில் அசத்தியிருப்பார்.

ஆசை ஆசையாய் கட்டிய வீடு இடித்த பின்பு மனோரமாவின் குமுறல் பார்வையாளர்களை நெகிழ செய்தது. தொடர்ந்து அசோக் சொத்து இழந்து இறுதியாக  இருந்த வீடும் அண்ணாமலை பெரும் போன பின் அந்த வீட்டு பத்திரத்தை அசோக்கிடம் கொடுக்க அண்ணாமலை சொல்லும் போது மனோரமாவின் நடிப்பு அந்த காட்சியின் உச்சகட்ட நெகிழ்ச்சி.. முதல் பாதியில் துள்ளலான இளம் பெண்ணாகவும் பின் குடும்ப தலைவியாகவும் இரு பரிமாணங்களில் நடிப்பை வெலிப்படுத்தி அசத்தியிருப்பார் நடிகை குஷ்பூ. படத்திற்கு மற்றொரு பலம் சரத் பாபு கதைப்படி பார்த்தால் வில்லன் கதாபாத்திரம் போல் இருந்தாலும் ரஜினிக்கு நிகரான காட்சிகளை பிரித்து சரத் பாபுவிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.

‘நாசமா போனியியா தெரு’ தொடங்கி படம் நெடுக வசனங்கள் மூலமும் காட்சிக்கு காட்சி நுணுக்கமான செய்கைகள் மூலம் சீரியஸ் படத்தை நகைச்சுவையுடன் உயிர்ப்புடன் வைத்திருப்பார் ஜனகராஜ்.

தேவாவின் இசை மற்றும் பாடல்கள். படத்திற்கு மிகப்பெரிய பலம். வந்தேண்டா பால்காரன் தொடங்கி கொண்டையில் தாழம்பூ பாடல் வரை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். ‘வெற்றி நிச்சயம்’ என்ற பாடல் இன்றும் பலருக்கு உந்துதல் தரும் பாடலாக இருந்து வருகிறது. தேவாவின் பின்னணி இசை சூப்பர் ஸ்டாருக்கு டிரெட் மியூசிக் காகவே அமைந்தது. காட்சிக்கு காட்சி வரும் பின்னணி இசை அந்த காட்சியின் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுகிறது.

அண்ணாமலை, 1992ம் ஆண்டு ஜீன் 27ம் தேதி வெளியான தமிழ் திரைப்படம். ரஜினிகாந்த், குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வெளியான ஆண்டு நல்ல ஹிட்டான திரைப்படம் அண்ணாமலை. வெளியாகி 31 ஆண்டுகள் ஆனாலும், நீங்காமல் சினிமா ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும் திரைப்படம்.

ரஜினி காந்திற்கு வலுவான மாஸ் ரசிகர்கள் கூட்டம் உருவாக காரணமாக இருந்த படங்களில் மிக  முக்கியமான படமாக அண்ணாமலை இருந்து வருகிறது.

“மலைடா.. அண்ணாமலை” பெரிய பெரிய பஞ்ச் வசங்களெல்லாம் இல்லை. ஒரு பெயர் தான் அதை சொல்லியதும் அதிரும் அரங்கம் அந்த வசனத்தின் வலிமையை உணர்த்தும். 31 ஆண்டுகள் என்ன.. எத்தனை ஆண்டுகள் கடந்தும் அண்ணாமலையின் சவால் என்றும் ஒலித்து கொண்டே இருக்கும்.

 

கோலாகலமாக நடைபெற்ற அஜித் பட நடிகரின் திருமணம்.. குவியும் வாழ்த்துகள்.. – வைரல் புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

கோலாகலமாக நடைபெற்ற அஜித் பட நடிகரின் திருமணம்.. குவியும் வாழ்த்துகள்.. – வைரல் புகைப்படங்கள் உள்ளே..

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. பிரபல நடிகர் பிரித்வி ராஜிற்கு அறுவை சிகிச்சை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து.. பிரபல நடிகர் பிரித்வி ராஜிற்கு அறுவை சிகிச்சை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டி சென்ற முதல் பெண்..  ரசிகர்களிடையே குவியும் வாழ்த்துகள்..
சினிமா

சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டி சென்ற முதல் பெண்.. ரசிகர்களிடையே குவியும் வாழ்த்துகள்..