கோலாகலமாக நடைபெற்ற அஜித் பட நடிகரின் திருமணம்.. குவியும் வாழ்த்துகள்.. – வைரல் புகைப்படங்கள் உள்ளே..

அஜித் பட நடிகரின் கோலாகல திருமண கொண்டாட்டம் வைரல் புகைப்படங்கள் உள்ளே - Ajith kumar movie fame kabir duhan singh gets married | Galatta

மாடலிங் துறை மூலம் தன் பயணத்தை தொடங்கியவர் பிரபல தென்னிந்தியா நடிகர் கபீர் துஹான் சிங். ஆரம்ப காலக் கட்டத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு பெரிய திரையில் நல்ல வரவேற்பை கொடுத்தது தென்னிந்திய திரையுலகம். கடந்த 2015 ல் தெலுங்கில் வெளியான ஜில் என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமான கபீர் துஹான் சிங், தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார்.  அதே ஆண்டில் கிக் திரைப்படம் தெலுங்கில் வெளியானது. அந்த படத்திலும் வில்லனாக கபீர் நடித்திருந்தார். கிக் திரைப்படம் மெகா ஹிட் அடிக்க கபீருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்புகள் குவிந்தது. அதன்படி தமிழிலும் கடந்த 2015 ல் அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது.

actor prithviraj sukumaran accident at vilayath buddha stunt shooting

தமிழில் முதல் படத்திலே உச்ச நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்பை கச்சிதாமாக பயன்படுத்தி தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார் கபீர் துஹான் சிங். அதை தொடர்ந்து தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் வில்லனாக மிரட்டி வந்தார் கபீர். அதன்படி தமிழில், விஜய் செதுபதி நடிப்பில் வெளியான ‘ரெக்க’ மற்றும் காஞ்சனா 3, ஆக்ஷன், அருவம் ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். அதன்படி தமிழ், தெலுங்கு, கன்னடம் என் பல்வேறு மொழிகளில் தற்போது 50 க்கும் மேற்பட்ட தென்னிந்தியா திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறார்.    

actor prithviraj sukumaran accident at vilayath buddha stunt shooting

இந்நிலையில் கபீர் துஹான் சிங்கிற்கும், ஹரியானாவை சேர்ந்த சீமா சஹால் என்பவரும் தற்போது காதல் திருமணம் செய்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற திருமண விழா குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து கபீர் துஹான் சிங் – சீமா சஹால் தம்பதிக்கு ரசிகர்களும் திரியுலக பிரபலங்களும் சமூக வலைத்தளம் வாயிலாக தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் அஜித் ரசிகர்கள் திருமண புகைப்படங்களை பகிர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Introducing you all to my Date for Forever ❤️ pic.twitter.com/Z6DQiH4h3d

— Kabir Duhan Singh (@Kabirduhansingh) June 24, 2023

 

 “இதனால் தான் மாமன்னன் படத்தில் நடிக்க வந்தேன்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்.. -  சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“இதனால் தான் மாமன்னன் படத்தில் நடிக்க வந்தேன்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

24 மணி நேரத்தில் அதிக லைக்குகள் குவித்த தளபதி விஜய் பட பாடல்கள்..! – அட்டகாசமான பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

24 மணி நேரத்தில் அதிக லைக்குகள் குவித்த தளபதி விஜய் பட பாடல்கள்..! – அட்டகாசமான பட்டியல் உள்ளே..

“நான் பார்த்த முதல் தமிழ் படம்..” பரியேரும் பெருமாள் படத்தை புகழ்ந்த ஈரோடு கூடுதல் ஆட்சியர்..!
சினிமா

“நான் பார்த்த முதல் தமிழ் படம்..” பரியேரும் பெருமாள் படத்தை புகழ்ந்த ஈரோடு கூடுதல் ஆட்சியர்..!