சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டி சென்ற முதல் பெண்.. ரசிகர்களிடையே குவியும் வாழ்த்துகள்..

சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டி சென்ற அருணா விவரம் உள்ளே - Aruna sivaya Win super singer season 9 | Galatta

தமிழ் தொலைக்காட்சிகளிலே பல ஆண்டுகளாக ரசிகர்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகி கொண்டிருப்பது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி. சிறியவர் மற்றும் பெரியவர் என்று இரு பிரிவுகளாக வகுத்து பல ஆண்டுகளாக பல நிகழ்சிகள் மூலம் திறமையான பின்னணி பாடகர்களை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் விருப்ப பட்டியிலில் தனி இடம். தற்போது ஒளிப்பரப்பாகி முடிந்துள்ள நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீசன் 9 (பெரியவர்களுக்கானது). கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த போட்டியார்களுக்கிடையே  இந்த சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த சீசனின் நடுவர்களாக பென்னி தயாள், ஸ்வேதா மேனன், உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர்.  மா.க.ப ஆனந்த் மற்றும் பிரியங்கா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 9 ன் இறுதிப்போட்டி நேற்று நடைப்பெற்றது. 

ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் 20 பேரை தேர்ந்தெடுத்து நடைபெற்ற இந்த சீசனின் இறுதி போட்டியில் 5 போட்டியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி அருனா சிவயா, பிரியா ஜெர்ஸன், ப்ரசன்னா ஆதிசேஷா, அபிஜித், பூஜா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கலந்து கொண்டார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இசை விழா இறுதியில் சூப்பர் சிங்கர் 9 போட்டியின் வெற்றியாளராக அருணா சிவாயா தேர்ந்தெடுக்கபட்டார். அவருக்கு 60 லட்ச ரூபாய் மதிப்பில் வீடு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 9 சீசன்களில் முதல் பெண்ணாக சூப்பர் சிங்கர் பட்டதை தட்டி சென்றுள்ளார் அருணா. இது குறித்து ரசிகர்கள் அருணாவிற்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். போட்டியின் இரண்டாவது இடத்தில் பிரியாவும் மூன்றாவது இடத்தில் பிரசன்னா ஆதிசேஷாவும் நான்காவது இடத்தில் அபிஜித் மற்றும் பூஜா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

போட்டியின் ஆரம்பத்திலிருந்து இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொன்ட போட்டியாளர்கள் தங்களது திறமையின் மூலம் ரசிகர்களின் ஆதரவை பெற்றனர். இதில் அருணா வாரந்தோறும் நடுவர்களால் பாராட்டப் பட்டு ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் பார்த்த முதல் தமிழ் படம்..” பரியேரும் பெருமாள் படத்தை புகழ்ந்த ஈரோடு கூடுதல் ஆட்சியர்..!
சினிமா

“நான் பார்த்த முதல் தமிழ் படம்..” பரியேரும் பெருமாள் படத்தை புகழ்ந்த ஈரோடு கூடுதல் ஆட்சியர்..!

‘மாமன்னன்’ படத்தில் ஏன் சந்தோஷ் நாராயணன் இல்லை..? உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்.. – Exclusive Interview உள்ளே..
சினிமா

‘மாமன்னன்’ படத்தில் ஏன் சந்தோஷ் நாராயணன் இல்லை..? உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்.. – Exclusive Interview உள்ளே..

“இந்திராதான் இந்தியா..” ஜிவி பிரகாஷ் இசையில் கங்கனா ரனாவத்..! – எமர்ஜென்சி பட ரிலீஸ் தேதியுடன் வெளியான அட்டகாசமான வீடியோ உள்ளே..
சினிமா

“இந்திராதான் இந்தியா..” ஜிவி பிரகாஷ் இசையில் கங்கனா ரனாவத்..! – எமர்ஜென்சி பட ரிலீஸ் தேதியுடன் வெளியான அட்டகாசமான வீடியோ உள்ளே..