“சூர்யா படம் தள்ளி போக இதுதான் காரணம்..” தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview உள்ளே..

கங்குவா படம் ரிலீஸ் தாமதம் குறித்து தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் உள்ளே - Producer Dhananjayan about Suriya kanguva movie release | Galatta

தமிழ் சினிமாவிலிருந்து அடுத்த பிரம்மாண்ட திரைப்படமாக வெளியாகும் திரைப்படங்களில் முக்கியமான சூர்யாவின் ‘கங்குவா’.  பல ஆண்டுகளாக தரமான திரைப்படங்களை தேர்ந்தேடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது மாறுபட்ட கதைகளத்தில் தன் திரை பயணத்திலே இல்லாத மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வரும் திரைப்படமாக இருப்பது கங்குவா. இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் சூர்யா கதானாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பாளிவ்ட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா தயாரிக்கும் கங்குவா திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்துள்ளார் மேலும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமான பீரியட் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் கங்குவா திரைப்படத்தை 10 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க 3D தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் கலந்து கொண்டு கங்குவா படம் குறித்து பல ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார், அதன்படி அவர் பேசியது. சூர்யா சாரோட திரைப்பயணம் பிரம்மாண்டமா தான் போய்ட்டு இருக்கு.. கங்குவா படம் பொறுத்தவரை டிஜிட்டல் உரிமமே பிரம்மாண்டமா வியாபாரம் ஆகிருக்கு.. அடுத்ததாக இசை, சாட்லைட் உரிமம் வியாபாரம் ஆகிட்டு இருக்கு.. ஒட்டு மொத்தமாவே இந்த படத்திற்கு நிறைய வியாபார எதிர்பார்ப்பு இருக்குசூர்யா சார் திரைபயணத்திலே அதிகம் வசூல் செய்யக்கூடிய படமாக கங்குவா இருக்கு..  அடுத்தடுத்து அவர் பண்ண போற படம் எல்லாம் இந்த பெஞ்ச் மார்க் அடுத்ததாக தான் இருக்கு.. என்றார். பின் தொடர்ந்து கங்குவா படம் ரிலீஸ் தாமதம் குறித்து கேட்கையில்,

“சில தடைகளும் தாமதமும் தவிர்க்கவே முடியாது. கங்குவா படத்தை பார்த்தால் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துட்டு தான் இருக்கு.. ஆனா அதை தவிர நிறைய வேலை இருக்கு..  CG வேலைகள் நிறைய இருக்கு.. படக்குழு 2024 க்கு ஆரம்பத்தில் வெளியிட தான் திட்டமிட்டோம் ஆனால் பின் தயாரிப்பு வேலைகள் அதிகமாக இருப்பதால் தாமதாமா ஆகுது..CG வேலைகள் ஏனோதானோ னு பண்ண முடியாது. ஒரு காலத்தை கொண்டு வரவேண்டும் என்றால் நிறைய வேலைகள் அதிலிருக்கிறது. என்றார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

மேலும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் அஜித் குமார் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி மற்றும் திரைத்துறை குறித்து பல தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு நேர்காணலில்  பகிர்ந்து கொண்ட முழு வீடியோ உள்ளே.

சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டி சென்ற முதல் பெண்..  ரசிகர்களிடையே குவியும் வாழ்த்துகள்..
சினிமா

சூப்பர் சிங்கர் பட்டத்தை தட்டி சென்ற முதல் பெண்.. ரசிகர்களிடையே குவியும் வாழ்த்துகள்..

 “இதனால் தான் மாமன்னன் படத்தில் நடிக்க வந்தேன்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்.. -  சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“இதனால் தான் மாமன்னன் படத்தில் நடிக்க வந்தேன்..” உண்மையை உடைத்த கீர்த்தி சுரேஷ்.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

24 மணி நேரத்தில் அதிக லைக்குகள் குவித்த தளபதி விஜய் பட பாடல்கள்..! – அட்டகாசமான பட்டியல் உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

24 மணி நேரத்தில் அதிக லைக்குகள் குவித்த தளபதி விஜய் பட பாடல்கள்..! – அட்டகாசமான பட்டியல் உள்ளே..