பிரபாஸின் ஆதிபுருஷ் பட புது சர்ப்ரைஸ்... ராவணனின் அட்டகாசமான சிவோஹம் வீடியோ பாடல் இதோ!

ஆதிபுருஷ் பட சர்ராவணனின் சிவோஹம் வீடியோ பாடல்,prabhas in adipurush movie shivoham video song out now | Galatta

இந்திய சினிமா இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட படைப்பாக நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் பிரபாஸ் அடுத்ததாக சயின்ஸ் பிக்சன் ஆக்சன் திரைப்படமாக தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் ப்ராஜெக்ட் கே படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரபாஸ் உடன் இணைந்து தீபிகா படுகோனே மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிரட்டலான ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது. எனவே பிரமாண்டமாக தயாராகும் ப்ராஜெக்ட் திரைப்படத்தின் மீது தற்போது மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் கிளம்பி இருக்கின்றன.

முன்னதாக கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய கவனத்தை பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பக்கா ஆக்ஷன் படமாக சலார் படத்தில் கதாநாயகனாக தற்போது நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரபாஸின் சலார் படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனிடையே ராமாயணத்தை கலைக்களமாக கொண்டு பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் தான் ஆதிபுரூஷ். கடந்த ஜூன் 16ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள ஆதிபுருஷ் திரைப்படம் கலவையான விமர்சனங்களேயே பெற்றது. ராகவா எனும் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க ஜானகியாக சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனான் நடித்துள்ளார். மேலும் மிரட்டலான ராவணன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே ஆகியோர் நடித்துள்ளனர். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ள ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆதிபுரூஷ் திரைப்படத்தை T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அடுத்த ஒரு ஹிட்டுக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் நடிகர் பிரபாஸுக்கு ஆதிபுரூஷ் திரைப்படமாவது கை கொடுக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருபுறம் ஆதிபுருஷ் திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கிராபிக்ஸ் உட்பட பல காரணங்களுக்காக ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆதிபுருஷ் திரைப்படத்திலிருந்து ராவணன் கதாபாத்திரத்தின் சிவோகம் வீடியோ பாடல் தற்போது வெளிவந்துள்ளது. அந்த வீடியோ பாடல் இதோ…
 

சினிமா

"ரோபோ காளை" உருவாக்கி வருகிறோம்... சூர்யாவின் வாடிவாசல் பட ஷூட்டிங் எப்போது?- செம்ம மாஸ் அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்!

'விஜய் சார் ரெடியா தான் இருக்காரு!'- தளபதியுடன் இணையும் படத்திற்கான திட்டம் குறித்து பேசிய வெற்றிமாறன்!
சினிமா

'விஜய் சார் ரெடியா தான் இருக்காரு!'- தளபதியுடன் இணையும் படத்திற்கான திட்டம் குறித்து பேசிய வெற்றிமாறன்!

விடாமுயற்சி... ‘அஜித் குமார் படமா?’ ‘மகிழ் திருமேனி படமா?'- தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் தரமான பதில்! வைரல் வீடியோ இதோ
சினிமா

விடாமுயற்சி... ‘அஜித் குமார் படமா?’ ‘மகிழ் திருமேனி படமா?'- தயாரிப்பாளர் தனஞ்ஜெயனின் தரமான பதில்! வைரல் வீடியோ இதோ