பத்து நாளில் இத்தனை கோடியா..? வியக்க வைக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் பட வசூல் நிலவரம்..

கோடிகளை குவிக்கும் பிரபாஸின் ஆதிபுருஷ் விவரம் உள்ளே - Prabhas adipurush crossed 450 crores | Galatta

பிரபாஸின் பிரம்மாண்ட வசூல் கலக்ஷன் செய்து உலகளவில் கவனம் பெற்ற படங்களில் ஒன்றாக இருந்து வருவது ஆதிபுருஷ். இராமாயணம் இதிகாசத்தின் ஒரு பகுதியை தழுவி உருவாக்கியுள்ள இப்படத்தினை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். படத்தில் இராமணாக பிரபாஸ் நடித்துள்ளார். மேலும் இவருடன் சீதா தேவியாக கீர்த்தி சனொன் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர் மேலும் ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஜூன் 16ம் தேதி உலகெங்கும் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகியானது. ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்புடன் ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக் ஓடி கொண்டிருக்கிறது, கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் அடிப்படையில் பிரபாஸின் ஆதி புருஷ் திரைப்படம் சாதனைகளை செய்து வருகின்றது.

இந்நிலையில் படம் வெளியாகி 10 நாள் முடிவில் உலகமெங்கும் வசூல்  நிலவரத்தை வெளியிட்டுள்ளது ஆதிபுருஷ் படக்குழு. அதன்படி பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம்  இதுவரை 450 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர். ஆரம்பத்தில் ஆதிபுருஷ் படத்தின் வசூல் ஒரு நாளில் 100 கோடி விகிதம் வசூலித்து வியக்க வைத்தது. தற்போது ஆதிபுருஷ் படத்தின் வசூல் வேட்டை வேகம் குறைந்துள்ளதை 10 நாள் முடிவில் தெரியவருகிறது என்று ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

We are incredibly touched by the overwhelming response shown towards Adipurush ❤️ Jai Shri Ram 🙏

Book your tickets on: https://t.co/mxnAzfDlBZ#Adipurush now in cinemas near you! ✨ #Prabhas @omraut #SaifAliKhan @kritisanon @mesunnysingh #BhushanKumar #KrishanKumar @vfxwaalapic.twitter.com/KaJhILhrEa

— Adipurush Movie (@Offladipurush) June 26, 2023

ஆதிபுருஷ் படத்தை தொடர்ந்து பிரபாஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘சலார்’. பான் இந்திய அளவு மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி பான் இந்திய அளவு உருவாகி வரும் ‘புரோஜக்ட் கே’ என்ற படத்திலும் பிரபாஸ் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் ஏற்கனவே பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, தீஷா பத்தானி ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த நட்சத்திரங்களின் பட்டியலில் உலக நாயகன் கமல் ஹாசனும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'அடர் காட்டு பகுதியில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா?'- ரத்னகுமார் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!
சினிமா

'அடர் காட்டு பகுதியில் தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங்... எங்கே தெரியுமா?'- ரத்னகுமார் பகிர்ந்த ட்ரெண்டிங் புகைப்படம் இதோ!

'50 ஆண்டுகளுக்குப் பிறகு..!'- பிரபாஸ் - அமிதாப் பச்சனின் ப்ராஜக்ட் K படத்தில் இணைவது பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை!
சினிமா

'50 ஆண்டுகளுக்குப் பிறகு..!'- பிரபாஸ் - அமிதாப் பச்சனின் ப்ராஜக்ட் K படத்தில் இணைவது பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை!

“சாதி புகழ் பாடும் பாடலை தடை செய்ய வேண்டும்” முதல்வருக்கு இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை..
சினிமா

“சாதி புகழ் பாடும் பாடலை தடை செய்ய வேண்டும்” முதல்வருக்கு இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை..