'இயக்குனர் நெல்சனின் பிறந்தநாள் சர்ப்ரைஸ்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஸ்பெஷல் மேக்கிங் வீடியோ இதோ!

நெல்சன் பிறந்தநாளில் வந்த ஜெயிலர் பட மேக்கிங் வீடியோ,super star rajinikanth jailer special making video on director nelson birthday | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ந்து வரும் இயக்குனர் நெல்சன் அவர்களின் பிறந்தநாளுக்கு பரிசளிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க வெளிவந்து சூப்பர் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப் குமார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்த இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பக்கா டார்க் காமெடி திரைப்படமாக வெற்றி பெற்ற டாக்டர் படத்தை தொடர்ந்து தனது மூன்றாவது திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்தார் இயக்குனர் நெல்சன். தளபதி விஜய் - இயக்குனர் நெல்சன் கூட்டணியில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரிலீஸான சமயத்தில் விமர்சன ரீதியில் எதிர்பார்த்த மிகப்பெரிய வரவேற்பை பெற தவறுயது. இருப்பினும் வர்த்தக ரீதியாக பீஸ்ட் திரைப்படம் அனேக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு நல்ல வசூல் செய்தது. 

இதனை அடுத்து தனது நான்காவது திரைப்படத்தில் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவரது வழக்கமான டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்ததால் ஜெயிலர் திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் அவர்கள் தனது பிறந்த நாளை இன்று ஜூன் 21ம் தேதி கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிரடியான புதிய ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இயக்குனர் நெல்சனின் முந்தைய படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் காட்சிகளோடு சூப்பர் ஸ்டார் அவர்களின் ஜெயிலர் படத்தின் மேக்கிங் காட்சிகள் கொண்ட இந்த ஸ்பெஷல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Wishing the unconventional director whose filmmaking continues to mesmerize & captivate audiences, @Nelsondilpkumar very Happy Birthday!
#HBDNelsonDilipkumar #HappyBirthdayNelsonDilipkumar pic.twitter.com/NpdqS0jqbO

— Sun Pictures (@sunpictures) June 21, 2023

சினிமா

"அண்ணன் நான் எறங்கி வரவா!"- தளபதி விஜயின் லியோ பட 'நா ரெடி' பாடலின் பக்கா மாஸ் ப்ரோமோ இதோ!

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்த படக்குழு... இந்தியாவில் இதுதான் முதல் முறை… சுவாரஸ்யமான வீடியோ உள்ளே!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்த படக்குழு... இந்தியாவில் இதுதான் முதல் முறை… சுவாரஸ்யமான வீடியோ உள்ளே!

பரபரப்பான இறுதிக்கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… செம்ம அப்டேட் கொடுத்த பார்வதி! வைரலாகும் புது GLIMPSE இதோ
சினிமா

பரபரப்பான இறுதிக்கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… செம்ம அப்டேட் கொடுத்த பார்வதி! வைரலாகும் புது GLIMPSE இதோ