'ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட ஷூட்டிங் ஓவர்!'- லைகா ப்ரொடக்ஷன்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2 பட முழு படப்பிடிப்பு நிறைவடைந்தது,raghava lawrence in chandramukhi 2 movie entire shoot wrapped | Galatta

லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க பிரம்மாண்டமாக தயாராகி வந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. முன்னதாக மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான மணிசித்திரதாழ் திரைப்படத்தின் ரீமேக்காக, இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்து வெளிவந்த சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பணக்காரன், மன்னன், உழைப்பாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பி.வாசு, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்த சந்திரமுகி திரைப்படம், ரஜினிகாந்த் அவர்களின் திரை பயணத்தில் குறிப்பிடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக பிளாக்பஸ்டர் ஹிட்டானது.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது.  

கடந்த 2022ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட சந்திரமுகி 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்று சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். மேலும் சந்திரமுகி 2 படத்தின் தேவைக்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு அட்டகாசமான டிரான்ஸ்பர்மேஷன்க்கு ராகவா லாரன்ஸ் மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரபல பாலிவுட் நடிகை நடிகை கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில், வைகைப்புயல் வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ஷ்ருஷ்டி தாங்கே, சுரேஷ் மேனன், விக்னேஷ் மற்றும் சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற பாகுபலி மற்றும் RRR திரைப்படங்களின் இசையமைப்பாளர் MM.கீரவாணி இசையமைக்கிறார். 

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க, கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக தயாராகி வந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ராதிகா சரத்குமாருக்கு அன்பின் அடையாளமாக தங்க மோதிரமும் கைக்கடிகாரமும் ராகவா லாரன்ஸ் பரிசளித்திருந்தார். அனேகமாக வரும் செப்டம்பர் மாதத்தில் விநாயகர் சதுர்த்தி வெளியீடாக சந்திரமுகி 2 திரைப்படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து சமீபத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்ததால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சந்திரமுகி 2 திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பி.வாசு, ராகவா லாரன்ஸ் ராதிகா சரத்குமார் ரவி மரியா மஹிமா நம்பியார் லட்சுமி மேனன் ஆகியோருடன் வைகைப்புயல் வடிவேலு இணைந்திருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை லைகா ப்ரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் இதோ…
 

And... Cut! Chandramukhi 2 shooting has officially packed up. 🎬 We can't contain our excitement for fans to experience it on the big screen. 🤩🕴🏻🔥 #Chandramukhi2 🗝️ #CM2 🗝️
🎬 #PVasu
🌟 @offl_Lawrence @KanganaTeam
🎶 @mmkeeravaani
🎥 @RDRajasekar
🛠️ #ThottaTharani
✂️🎞️… pic.twitter.com/cqxHM8ZJ86

— Lyca Productions (@LycaProductions) June 20, 2023

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்த படக்குழு... இந்தியாவில் இதுதான் முதல் முறை… சுவாரஸ்யமான வீடியோ உள்ளே!
சினிமா

தளபதி விஜயின் லியோ படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்த படக்குழு... இந்தியாவில் இதுதான் முதல் முறை… சுவாரஸ்யமான வீடியோ உள்ளே!

பரபரப்பான இறுதிக்கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… செம்ம அப்டேட் கொடுத்த பார்வதி! வைரலாகும் புது GLIMPSE இதோ
சினிமா

பரபரப்பான இறுதிக்கட்டத்தில் சீயான் விக்ரம் - பா.ரஞ்சித்தின் தங்கலான்… செம்ம அப்டேட் கொடுத்த பார்வதி! வைரலாகும் புது GLIMPSE இதோ

முதல் தமிழ் நடிகராக நியூயார்க்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

முதல் தமிழ் நடிகராக நியூயார்க்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... கலைக்கட்டும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்! ட்ரெண்டிங் வீடியோ இதோ