தளபதி விஜயின் மகன் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்திய ARரஹ்மானின் மகன் ARஅமீன்… ட்ரெண்டாகும் UNSEEN புகைப்படம் இதோ!

விஜயின் மகன் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்திய ARரஹ்மானின் மகன் ARஅமீன்,Ar rahman son ar ameen wishes vijay son sanjay on his birthday | Galatta

தளபதி விஜயின் மகன் சஞ்சய் பிறந்த நாளுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதுவரை விஜயன் திரை பயணத்தில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் லியோ திரைப்படத்திலிருந்து கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன வருகிற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக விஜயின் லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக தனது திரைப் பயணத்தில் 68-வது திரைப்படமாக தளபதி 68 திரைப்படத்தில் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருக்கிறார் திகில் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் கைகோர்க்கும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற இசை ஜாம்பவானாக விளங்கும் இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள்   சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். தொடர்ந்து  இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் லால் சலாம், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் பிக்சன் படமாக வர இருக்கும் அயலான், உலகநாயகன் கமல்ஹாசன் - மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் KH234 மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜீனி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தளபதி விஜயின் மகன் சஞ்சயின் பிறந்தநாளுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் ஏ.ஆர்.அமீன் வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் வெளியிட்டிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தளபதி விஜயின் மகன் சஞ்சய் தற்போது இயக்குனராகும் நோக்கத்தோடு  குறும்படங்களை இயக்கி வருகிறார் என்பது நாம் அறிவோம் அறிந்தது. அதேபோல் இசை புயலின் மகனான ஏ.ஆர்.அமீன் பாடகராக ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, ஷங்கர் - ரஜினிகாந்த் கூட்டணியின் 2.O, தனுஷின் கலாட்டா கல்யாணம், சிலம்பரசன்.TRன் பத்து தல, மாரி செல்வராஜின் மாமன்னன் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார்.  

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தளபதி விஜய்யும் இணைந்தால்  தரமான ஹிட் உறுதி என ரசிகர்கள்  உற்சாகம் அடைவது போலவே தற்போது அவர்களது மகன்கள் இணைந்திருக்கும் இந்த புகைப்படமும் விரைவில் இவர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக தெரிவித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு பகிர்ந்து வருகின்றனர். இதுவரை வெளிவராத சஞ்சய்- AR.அமீனின் இந்த UNSEEN புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
sasikumar about jai death scene in subramaniapuram and sundrapandian climax

'சுப்ரமணியபுரம் படம் எடுக்க காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த இயக்குனர் - நடிகர் சசிகுமாரின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'சுப்ரமணியபுரம் படம் எடுக்க காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த இயக்குனர் - நடிகர் சசிகுமாரின் சிறப்பு பேட்டி இதோ!

ரஜினிகாந்தின் மாஸான ஜெயிலர் பட 3வது பாடல்… ஜுஜுபி என சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வந்த செம்ம அறிவிப்பு இதோ!
சினிமா

ரஜினிகாந்தின் மாஸான ஜெயிலர் பட 3வது பாடல்… ஜுஜுபி என சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வந்த செம்ம அறிவிப்பு இதோ!

'ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. ஏற்கனவே என் உடம்புல 106 தையல்!'- ஹரியின் விஷால்34 பட அதிரடி அப்டேட் கொடுத்த விஷால்! வைரல் வீடியோ
சினிமா

'ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. ஏற்கனவே என் உடம்புல 106 தையல்!'- ஹரியின் விஷால்34 பட அதிரடி அப்டேட் கொடுத்த விஷால்! வைரல் வீடியோ