"சுப்ரமணியபுரத்தில் ஜெய்க்கு நான் செய்த கொடுமையை சுந்தரபாண்டியனில் உணர்ந்தேன்!"- வைரலாகும் சசிக்குமாரின் பேட்டி இதோ!

சுப்ரமணியபுரம் சுந்தரபாண்டியன் படங்கள் பற்றி பேசிய சசிகுமார்,sasikumar opens about jai death scene in subramaniapuram and sundrapandian | Galatta

நடிகர் சசிகுமார் அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் என்ற தனது முதல் படைப்பின் வாயிலாக நடிகர் - தயாரிப்பாளர் - இயக்குனர் என முப்பரிமாணங்களில் களமிறங்கினார். மிகப்பெரிய வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் திரைப்படமாக திகழ்கிறது. தற்போது  சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளிவந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த 15 ஆண்டுகளில் நினைவு கூறும் வகையில் நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் சசிகுமார் அவர்கள் கலந்து கொண்டார். முழுக்க முழுக்க சுப்ரமணியபுரம் திரைப்படம் குறித்து நடந்த இந்த நேர்காணலில் இதுவரை ரசிகர்கள் அறிந்திடாத பல சுவாரஸ்ய தகவல்களை சசிக்குமார் பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் ஜெய் கொலை செய்யப்படும் காட்சி குறித்து கேட்டபோது, 

“இதெல்லாம் லொகேஷனுக்கு போகும்போது இந்த ஷாட் எப்படி வைத்தால் நல்லா இருக்கும் என வைத்தது தான். நானும் கேமராமேனும் பேசியதுதான், அவர்கள் பிரிந்து செல்வதை ஒரே ஷாட்டில் வைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்து செய்த ஒரு விஷயம் தான். இருவரும் பிரிந்து செல்வதற்கு ஒரு ஷாட் எடுத்த பிறகு, அந்தப் பெண்ணை அழைத்துச் செல்லும் ஒரு ஷாட் எடுத்துவிட்டு அவன் விழும் ஒரு ஷாட் எடுத்தோம். அதில் அந்த பொண்ணு நன்றாக நடித்து விட்டார். அடுத்த நாள் ஜெய்க்கு எடுத்தோம். ஜெய் அந்த விழுகிற ஷாட், அது பார்த்தீர்கள் என்றால் அவர் கையை ஊண்றாமல் விழுந்து இருப்பார். அப்படி விழுந்து அவருக்கு அடி எல்லாம் பட்டுவிட்டது. டப்பு டப்பு என்று விழுந்து கொண்டே இருக்கிறார் சரியாக வரவில்லை. என்னை துரோகம் செய்து விட்டாயே என்று அந்த சோகம் வரவில்லை. பின்னர் போய் ஜெயிடம் சொன்னேன் “அந்த பொண்ணு நேற்று நன்றாக செய்து விட்டாள். இந்த சீன் தான் உனக்கு இதில் தான் நீ ஸ்கோர் பண்ண வேண்டும்.” என்று சொல்லி கையை ஊன்றாமல் செய்ய சொன்னேன். அதை மிகவும் சிறப்பாக செய்துவிட்டார். கையை ஊன்றாமல் ஜெய் விழுந்தார். மிக சரியாக செய்து விட்டார். படம் பார்க்கும்போது அது உணர முடிந்தது. அன்று நான் அதை இயக்குனராக சொல்லி விட்டேன் அப்படி விழுகும் போது அது எவ்வளவு கொடுமையானது, என்னெல்லாம் ஆகும் என்பது நான் நடிகனான பிறகு தான் எனக்கு தெரிந்தது. சுந்தரபாண்டியன் படத்தில் அதே மாதிரி என்னை விழ சொன்னார்கள். ஜெய் விழுந்த மாதிரி விழுந்தேன், விழுந்ததும் அடிபட்டு எல்லாம் இருட்டிவிட்டது. அப்படியே மண்டை குழம்பி விட்டது அப்போது எனக்கு ஜெயை தான் நினைத்தேன் நாம் இப்படித்தானே ஜெயை செய்தோம். ஜெய்க்கு இப்படித்தானே இருந்திருக்கும் என்கிற அந்த வலி அப்போது தான் தெரிந்தது. ஒரு இயக்குனராக நன்றாக வர வேண்டும் என அப்போது உசுப்பேத்தி விட்டு வந்து விட்டோம். இப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை அடுத்த படத்திலேயே நாம் தெரிந்து கொண்டோம்.” என பதில் அளித்துள்ளார் இன்னும் பல முக்கியமான சுவாரசியமான தகவல்களை சசிகுமார் பகிர்ந்து கொண்ட அந்த சிறப்பு நேர்காணலில் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ரஜினிகாந்தின் மாஸான ஜெயிலர் பட 3வது பாடல்… ஜுஜுபி என சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வந்த செம்ம அறிவிப்பு இதோ!
சினிமா

ரஜினிகாந்தின் மாஸான ஜெயிலர் பட 3வது பாடல்… ஜுஜுபி என சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வந்த செம்ம அறிவிப்பு இதோ!

'ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. ஏற்கனவே என் உடம்புல 106 தையல்!'- ஹரியின் விஷால்34 பட அதிரடி அப்டேட் கொடுத்த விஷால்! வைரல் வீடியோ
சினிமா

'ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது.. ஏற்கனவே என் உடம்புல 106 தையல்!'- ஹரியின் விஷால்34 பட அதிரடி அப்டேட் கொடுத்த விஷால்! வைரல் வீடியோ

தளபதி விஜயின் லியோ பட “நா ரெடி” பாடலுக்கு நடனமாடிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ பட “நா ரெடி” பாடலுக்கு நடனமாடிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ!