ரிலீஸுக்கு ரெடியான MSதோனி தயாரிப்பின் முதல் தமிழ் படைப்புஏ... ஹரிஷ் கல்யாணின் LGM பட சென்சார் அறிக்கை இதோ!

MSதோனி தயாரிப்பில் வரும் LGM படத்தின் சென்சார் அறிக்கை வெளியீடு,Ms dhoni productions lgm movie censored with u | Galatta

உலக அளவில் பல கோடி கிரிக்கெட் ரசிகர்களுக்கு  மிகப் பிடித்த கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணியின்  ஜாம்பவானாகவும் திகழும் மகேந்திர சிங் தோனி அவர்கள் தனது தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் முதல் தமிழ் திரைப்படமான LGM (Let's Get Married) திரைப்படத்தின் சென்சார் அறிக்கை வெளியானது.  மக்கள் மனதை வென்ற கிரிக்கெட் வீரராக பல சாதனைகள் படைத்து கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் தெறிக்க விட்ட தோனி தற்போது திரையுலகில் தடம் பதிக்க எண்ணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி சாக்ஷி உடன் இணைந்து தோனி என்டர்டைன்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்தார். இந்த தயாரிப்பு நிறுவனம் தனது முதல் படைப்பாக தமிழில் முதல் படத்தை தயாரித்துள்ளது. 

அந்த வகையில் தோனி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் முதல் படமாக உருவாகியிருக்கும் படம் தான் LGM (Let's Get Married). அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி கதை, திரைக்கதை, வசனங்கள், எழுதி இயக்கியுள்ள LGM (Let's Get Married) படத்தில் தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் கதையின் நாயகனாக நடித்துள்ளார். கடைசியாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ஓமணப் பெண்ணே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பூ படத்தின் இயக்குனர் சசி இயக்கத்தில் ரொமான்டிக் திரைப்படமாக நடித்திருக்கும் நூறு கோடி வானவில், அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடித்துள்ள டீசல் மற்றும் நடிகர் “அட்டகத்தி” தினேஷ் உடன் இணைந்து நடித்து வரும் லப்பர் பந்து உள்ளிட்ட திரைப்படங்கள் ஹரிஷ் கல்யாணின் கைவசம் இருக்கின்றனர். ஷரிஷ் கல்யாணுடன் இணைந்து லவ் டுடே நாயகி இவானா கதாநாயகியாக நடித்துள்ள LGM (Let's Get Married) படத்தில் நதியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை நடிகர் யோகி பாபு மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தீபா, விடிவி கணேஷ், ஸ்ரீநாத், ஆர்ஜே விஜய், வினோதினி வைத்தியநாதன் என ஒரு நடிகர்கள் பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தோனி என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து டெல்டா ஸ்டுடியோ நிறுவனம் வழங்கும் LGM (Let's Get Married) திரைப்படத்திற்கு, விஷ்வாஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவில், பிரதீப் படத்தொகுப்பு செய்ய, இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். பாடலாசிரியர் மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகி இருக்கும் LGM திரைப்படத்திற்கு தினேஷ் மாஸ்டர் மற்றும் சாண்டி மாஸ்டர் இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த LGM (Let's Get Married) திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அனைத்து வயது ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தயாராகியுள்ள LGM படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை MSதோனி வெளியிட சமீபத்தில் வெளிவந்து பெரும் கவனத்தை பெற்றது. வருகிற ஜூலை 28ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் LGM படம் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் LGM திரைப்படத்திற்கு சென்சாரில் “U” சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும் தற்போது ரிலீசுக்கு முற்றிலும் தயாராகி விட்டதாகவும் பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பு இதோ…
 

At the #LGMPressMeet #LGM in theatres on July 28.

A @SakthiFilmFctry Release 😍@DhoniLtd @msdhoni @SaakshiSRawat @Ramesharchi @iamharishkalyan @i_ivana @ActressNadiya @iyogibabu @rjvijayofficial @vp_offl @Actor_Srinath @vaidhyamohan5 @VinodhiniUnoffl @janakisabeshpic.twitter.com/8k8RffXn14

— Sakthi Film Factory (@SakthiFilmFctry) July 26, 2023

சுப்ரமணியபுரம் பட க்ளைமாக்ஸ் காட்சியின் சுவாரசியங்களை பகிர்ந்த சசிகுமார்... ஸ்பெஷல் வீடியோ இதோ!
சினிமா

சுப்ரமணியபுரம் பட க்ளைமாக்ஸ் காட்சியின் சுவாரசியங்களை பகிர்ந்த சசிகுமார்... ஸ்பெஷல் வீடியோ இதோ!

'சுப்ரமணியபுரம் படம் எடுக்க காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த இயக்குனர் - நடிகர் சசிகுமாரின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'சுப்ரமணியபுரம் படம் எடுக்க காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த இயக்குனர் - நடிகர் சசிகுமாரின் சிறப்பு பேட்டி இதோ!

ரஜினிகாந்தின் மாஸான ஜெயிலர் பட 3வது பாடல்… ஜுஜுபி என சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வந்த செம்ம அறிவிப்பு இதோ!
சினிமா

ரஜினிகாந்தின் மாஸான ஜெயிலர் பட 3வது பாடல்… ஜுஜுபி என சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வந்த செம்ம அறிவிப்பு இதோ!