ரஜினிகாந்தின் மாஸான ஜெயிலர் பட 3வது பாடல்… ஜுஜுபி என சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் வந்த செம்ம அறிவிப்பு இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட 3வது பாடல் அறிவிப்பு,Super star rajinikanth jailer movie third single announcement | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலான நடிப்பில் தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் 3வது பாடல் அறிவிப்பு தற்போது வெளியானது. அன்றும் இன்றும் என்றும் என மக்களின் மனம் கவர்ந்த நட்சத்திரமாக கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஸ்டைலால் ரசிகர்களை கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற தவறிய போது ஆனாலும் அடுத்தடுத்து அவரது நடிப்பில் தயாராகும் படங்கள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பகுதி படபிடிப்பை நிறைவு செய்து இருக்கிறார். அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

முன்னதாக மீண்டும் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்ததது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூலை 28ஆம் தேதி ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியானது. ஏற்கனவே வெளிவந்த காவாலா மற்றும் ஹுக்கும் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் ஹிட்டடித்த நிலையில், சூப்பர் ஸ்டாரின் பாப்புலரான பஞ்ச் வசனங்களில் ஒன்றான ஜூஜூபி என்ற மூன்றாவது பாடல் நாளை ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டகாசமான அந்த அறிவிப்பு இதோ…

#JailerThirdSingle dhana venum? Adhelam #Jujubee matter😎💥 Releasing Tomorrow at 6 PM

🎵@anirudhofficial
🎤@talktodhee
✍🏻@soupersubu@rajinikanth @Nelsondilpkumar #Jailer pic.twitter.com/8Jb0LeGhzD

— Sun Pictures (@sunpictures) July 25, 2023

ஆன் ஸ்கிரீனில் இணையாத தளபதி - புரட்சி தளபதி காம்போ அரசியலில் இணையுமா?- விஷாலின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ
சினிமா

ஆன் ஸ்கிரீனில் இணையாத தளபதி - புரட்சி தளபதி காம்போ அரசியலில் இணையுமா?- விஷாலின் சுவாரஸ்யமான பதில்! வைரல் வீடியோ

'தனுஷ் ரசிகர்களே ரெடியாகிக்கோங்க!'- கில்லர் கில்லர்
சினிமா

'தனுஷ் ரசிகர்களே ரெடியாகிக்கோங்க!'- கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்" பட அதிரடியான டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சூர்யாவின் கங்குவா பட அடுத்த செம்ம சர்ப்ரைஸ் LOADING… ரசிகரின் வேண்டுகோளுக்கு படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு இதோ!
சினிமா

சூர்யாவின் கங்குவா பட அடுத்த செம்ம சர்ப்ரைஸ் LOADING… ரசிகரின் வேண்டுகோளுக்கு படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு இதோ!