பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயனின் மாவீரன்... படக்குழு வெளியிட்ட 10 நாள் வசூல் விவரம் இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் 75கோடியை கடந்தது,sivakarthikeyan in maaveeran movie crossed 75 crores in box office | Galatta

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் மாவீரன் திரைப்படத்தின் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியானது. தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக களமிறங்கி மக்களிடையே மிகப் பிரபலமடைந்து சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிகராக வளர்ந்து வந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் ஒவ்வொன்றும் அனைத்து வயதினரும் ரசிக்கும்படியாக பக்கா எண்டர்டெயின்மென்ட் பேக்கேஜாக இருப்பது வழக்கம். அந்த வகையில் நடிப்பில் சிவகார்த்திகேயன் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. இருப்பினும், அடுத்தடுத்து பக்கா ட்ரீட் கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் வரிசையாக வர இருக்கின்றன. 

அந்த வகையில் அடுத்ததாக இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களோடு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் இணைய இருப்பதாக தெரிகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வரும் என ரசிகர்கள் அவர்களோடு காத்திருக்கின்றனர். முன்னதாக உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் SK21 திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கும் SK21 திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . சமீபத்தில் SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கப்பட்ட நிலையில், இதர அறிவிப்புகள் விரைவில் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் R.ரவிசங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக தயாராகி இருக்கும் அயலான் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸாகிறது.

இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள திரைப்படம் தான் மாவீரன். முன்னதாக யோகி பாபு நடிப்பில் வெளிவந்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் மனதை வென்ற மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகளும் விருமன் படத்தின் நாயகியுமான அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். முதல் முறையாக முழு நீள வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்திருக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க தமிழில் மாவீரன் , தெலுங்கில் மஹாவீருடு என தயாராகும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட கடந்த ஜூலை 14ம் தேதி மாவீரன் படம் உலகெங்கும் திரையரங்குகளில் மாவீரன் படம் ரிலீஸானது.

சிவகார்த்திகேயனின் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத வித்தியாசமான படமாக வெளிவந்திருக்கும் இந்த மாவீரன் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ள மாவீரன் திரைப்படத்தை ரிலீசானதில் இருந்து 10 நாட்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் இந்த 10 நாட்களில் இதுவரை 75 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

Our #Maaveeran/#Mahaveerudu has grossed over 75 CRORES worldwide. Thanks to the wonderful fans and audience for making it a BLOCKBUSTER 🥳🙏#BlockbusterMaveeran #BlockbusterMahaveerudu

🌟 @Siva_Kartikeyan
🎙️ @VijaySethuOffl / @RaviTeja_offl
🎬 @madonneashwin #VeerameJeyampic.twitter.com/SkPfB2uciN

— Shanthi Talkies (@ShanthiTalkies) July 25, 2023

சூர்யாவின் கங்குவா பட அடுத்த செம்ம சர்ப்ரைஸ் LOADING… ரசிகரின் வேண்டுகோளுக்கு படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு இதோ!
சினிமா

சூர்யாவின் கங்குவா பட அடுத்த செம்ம சர்ப்ரைஸ் LOADING… ரசிகரின் வேண்டுகோளுக்கு படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு இதோ!

'அலப்பற கெளப்பியாச்சு' ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இலவச பாஸ்களை ரசிகர்கள் அள்ளியது எத்தனை நொடிகளில்? மாஸ் அறிவிப்பு இதோ
சினிமா

'அலப்பற கெளப்பியாச்சு' ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இலவச பாஸ்களை ரசிகர்கள் அள்ளியது எத்தனை நொடிகளில்? மாஸ் அறிவிப்பு இதோ

'பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபத்து!'- உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தாரிடம் வீடியோ காலில் துக்கம் விசாரித்த சூர்யா! வீடியோ உள்ளே
சினிமா

'பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபத்து!'- உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்தாரிடம் வீடியோ காலில் துக்கம் விசாரித்த சூர்யா! வீடியோ உள்ளே