தளபதி விஜயின் லியோ பட “நா ரெடி” பாடலுக்கு நடனமாடிய இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவான்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

தளபதி விஜய்யின் லியோ பட நா ரெடி பாட்டுக்கு நடனமாடிய ஷிகர் தவான்,shikar dhawan dance reels video of thalapathy vijay in leo naa ready | Galatta

தளபதி விஜயின்  லியோ திரைப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான “நா ரெடி தான்”  பாடலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்  ஷிக்கர் தவான்  நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்த லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் எனும் மெகா ஹிட் படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் உடன் கைகோர்த்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் திரைப்படமாக பெரும் வெற்றி பெற்றது. இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் உடன் மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த லியோ திரைப்படம் இந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களில் 125 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் திரிஷா லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் முதல் பாடல் “நா ரெடி” பாடல் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஹிட் ஆனது. தளபதி விஜயின் படங்களிலிருந்து வெளிவரும் பாடல்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய ட்ரெண்டாகி அந்தப் பாடல்களுக்கு முன்னணி பிரபலங்கள் பலரும் நடனமாடும் ரிலீஸ் வீடியோக்கள் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் “நா ரெடி” பாடலுக்கும் பல பிரபலங்கள் நடனமாடும் வீடியோக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன  அந்த வரிசையில் தற்போது லியோ படத்தின் நா ரெடி பாடலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடனமாடி இருக்கும் வீடியோவும் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.  தளபதி விஜயின் ஸ்டைலில் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடனமாடும் அட்டகாசமான இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 

View this post on Instagram

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)

'தனுஷ் ரசிகர்களே ரெடியாகிக்கோங்க!'- கில்லர் கில்லர்
சினிமா

'தனுஷ் ரசிகர்களே ரெடியாகிக்கோங்க!'- கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்" பட அதிரடியான டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சூர்யாவின் கங்குவா பட அடுத்த செம்ம சர்ப்ரைஸ் LOADING… ரசிகரின் வேண்டுகோளுக்கு படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு இதோ!
சினிமா

சூர்யாவின் கங்குவா பட அடுத்த செம்ம சர்ப்ரைஸ் LOADING… ரசிகரின் வேண்டுகோளுக்கு படக்குழு கொடுத்த சூப்பர் அறிவிப்பு இதோ!

'அலப்பற கெளப்பியாச்சு' ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இலவச பாஸ்களை ரசிகர்கள் அள்ளியது எத்தனை நொடிகளில்? மாஸ் அறிவிப்பு இதோ
சினிமா

'அலப்பற கெளப்பியாச்சு' ரஜினிகாந்தின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா இலவச பாஸ்களை ரசிகர்கள் அள்ளியது எத்தனை நொடிகளில்? மாஸ் அறிவிப்பு இதோ