“படம் முழுக்க அரசியல் தான்..” சுப்ரமணியபுரம் படம் குறித்து நடிகரும் இயக்குனருமான சசிகுமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview இதோ..

சுப்ரமணியபுரம் பாடல் குறித்து சசிகுமார் பகிர்ந்த தகவல் வீடியோ உள்ளே - Director Sasikumar about subramaniyapuram | Galatta

தமிழ் திரைத்துறையில் வரலாற்றில் சிறந்த படங்களை பட்டிலிட்டால் முதல் முக்கிய இடங்களில் வந்து நிற்கும் படங்களில் ஒன்று சுப்ரமணியபுரம். கடந்த 2008 ல் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் மதுரை வாழ்வியலையும் ஒட்டி அட்டகாசமான திரைப்படமாக வெளிவந்த  படம் சுப்ரமணியபுரம். இதில் நடிகர் ஜெய் கதாநயாகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுவாதி நடித்திருப்பார். மேலும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் இயக்குனர் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இயக்குனர் சசிகுமாரின் சொந்த தயாரிப்பான காமெடி தயாரிப்பு நிறுவனம் மூலம் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கதிர் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருப்பார். யாரும் எதிர்பாராத வகையில் வெளியான சுப்ரமணிபுரம் திரைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வெளியான நாளிலிருந்தே மிகப்பெரிய அளவு பெசப்பட்டது. ஆழமான திரைகதையை மக்கள் வாழ்வியலோடு சொல்லி செல்லும் சுப்ரமணியபுரம் திரைப்படம் படத்தில் பணியாற்றிய பலருக்கும் முகவரியாக அமைந்தது. சமீபத்தில் இப்படத்தின் 15ஆண்டு கால நிறைவை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். காரணம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் அதிகம் விவாதிக்கப் பட்டும் வருகிறது.

 இந்நிலையில் நமது கலாட்ட ப்ளஸ் சிறப்பு பேட்டியில் இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு சுப்ரமணியபுரம் படம் உருவான விதம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

"முதல்ல படத்துல பாட்டே இல்ல..  வெறும் இளையராஜா பாடல் மட்டும்தான் படத்தில ஓடிட்டு இருக்கும்..  சிறு பொன்மனி, தோட்டம் கொண்ட, இதயம் போகுதே போன்ற பாடல்கள் தான் படத்தில் இருந்தது. இதை ஜேம்ஸ் சாரிடம் சொன்னேன். ‘என்னடா முதல் படம் பாட்டு இல்லன்ற ஒரு பாட்டாவது கொடு’ னு கேட்டார். படத்தில் ஹீரோ , ஹீரோயின் சந்திக்குற காட்சி 4 தான் இருந்தது. அதனால் அவங்க காதலை வெளிபடுத்த வேண்டும் அதற்கான தேவை இருந்தது. அப்போ தான் கிளைமேக்ஸ் இன்னும் வலிமையா இருக்கும் என்று கண்கள் இரண்டால் பாடல் வெச்சோம்.

கண்கள் இரண்டால் பாட்டு நல்லாருந்தது. அதனால் அந்த பாட்ட அழகா காட்சிப்படுத்துனோம். இதெல்லாம் பண்ணதால என்னாச்சுனா படம் காதல் படமா ஆயிடுச்சு.. ஆனா படம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் படம்.  எல்லா விஷயத்துலயும் ஒரு அரசியல் சொல்லிட்டு தான் போவோம்.. படம் நெடுக அரசியல் இருக்கும்.." என்றார் இயக்குனரும் நடிகருமான சசிக்குமார்.

மேலும் இயக்குனரும் நடிகருமான சசிக்குமார் அவர்கள் சுப்பிரமணியபுரம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ..

Threads ல் வரலாறு படைத்த முதல் இந்திய நடிகர் அல்லு அர்ஜுன்.. உற்சாகத்தில் ரசிகர்கள். விவரம் இதோ..
சினிமா

Threads ல் வரலாறு படைத்த முதல் இந்திய நடிகர் அல்லு அர்ஜுன்.. உற்சாகத்தில் ரசிகர்கள். விவரம் இதோ..

கால் இழந்த மாணவனுக்கு  இசையமைப்பாளர் டி இமான் செய்த உதவி..! – நெகிழ்ச்சியுடன் பாரட்டி வரும் ரசிகர்கள்..
சினிமா

கால் இழந்த மாணவனுக்கு இசையமைப்பாளர் டி இமான் செய்த உதவி..! – நெகிழ்ச்சியுடன் பாரட்டி வரும் ரசிகர்கள்..

ஒடிடியில் வெளியாகும் ஊர்வசியின் 700வது திரைப்படம் ‘அப்பத்தா’ – கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ..
சினிமா

ஒடிடியில் வெளியாகும் ஊர்வசியின் 700வது திரைப்படம் ‘அப்பத்தா’ – கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ..