"காலா எனக்கு கற்பனைக்கு எட்டாத வாய்ப்பு" திலீபன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்.. - Exclusive Video இதோ..

காலா திரைப்படம் குறித்து நடிகர் திலீபன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்மான தகவல் - Actor Dileepan about pa rajith Kaala movie | Galatta

தமிழ் சினிமாவிலிருந்து ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த 2018 ல் வெளியான திரைப்படம் காலா. இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் மாறுபட்ட கதைகளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான திரைப்படம் காலா. நில அரசியலை மும்பை தாராவி நிலப்பரப்பில் பேசிய வெளியான இப்படத்தில் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க படத்தின் கதாநாயகிகளாக ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் படத்தில் நானா பட்டேக்கர், சம்பத், பங்கச் திருப்பாதி, சமித்திரகனி, திலீபன், மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். நடிகர் தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பின் கீழ் வெளியான காலா படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான காலா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவு கொண்டாடப் பட்டது. திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் கழிந்தும் இன்றும் காலா திரைப்படத்தை நவீன ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

இந்நிலையில் காலா படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெற்ற நடிகர் திலீபன் அவர்கள் நமது கலாட்டா சினிமா சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு அவரது திரைப்பயணம் குறித்தும்சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகனாக காலா படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் திலீபன் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, "எனக்கு காலா முழுக்க முழுக்க பாஸிட்டிவ் வரவேற்பு தான். காலா கிடைத்தது எனக்கு பெரிய கிஃப்ட். ரஞ்சித் சார் தான் அதற்கு காரணம். ஒரு இயக்குனர் நினைத்தால் என்ன வேணா பண்ணலாம். ஒரு படம் தான் பண்ணிருக்கேன். இன்னொரு படம் ரிலீஸ் ஆகல.. அப்படிங்கறப்போ இப்படி ஒரு ஹிட் காம்போ ல ஒரு கதாபாத்திரம் நமக்கு கிடைக்குறது கற்பனைக்கு எட்டாத விஷயம் னு நான் நினைக்கிறேன்.

ரஜினி சார் படத்துல அவர் பையனா பன்றோம்ன்றது ஓகே.. ஆனா அந்த கதாபாத்திரத்தை நம்பி எனக்கு கொடுத்தது ரஞ்சித் சார் தான். அதை கொடுக்கவே ஒரு நம்பிக்கையும் பயங்கரமான தைரியமும் தேவைப்படுகிறது. நம்ம இயக்குனரா இருந்தா அப்படி வைக்க நம்ம பயப்படுவோம். அந்த படம் பண்ண பிறகு எல்லோருடைய ஆழ்மனதிலும் நாம் பதிஞ்சிட்டோம். அதோட ரீச் வேற.. அந்த கதாபாத்திரத்தை மக்கள் ஏத்துக்கிட்டாங்க. அந்த படத்தின் மூலம் எப்பேற்பட்ட கதாபாத்திரமும் இவன் பண்ணிடுவான்ற மார்கெட் உருவாகிடுச்சு.." என்றார் நடிகர் திலீபன்.

மேலும் நடிகர் திலீபன் அவர்கள் சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ உள்ளே..

 

கால் இழந்த மாணவனுக்கு  இசையமைப்பாளர் டி இமான் செய்த உதவி..! – நெகிழ்ச்சியுடன் பாரட்டி வரும் ரசிகர்கள்..
சினிமா

கால் இழந்த மாணவனுக்கு இசையமைப்பாளர் டி இமான் செய்த உதவி..! – நெகிழ்ச்சியுடன் பாரட்டி வரும் ரசிகர்கள்..

ஒடிடியில் வெளியாகும் ஊர்வசியின் 700வது திரைப்படம் ‘அப்பத்தா’ – கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ..
சினிமா

ஒடிடியில் வெளியாகும் ஊர்வசியின் 700வது திரைப்படம் ‘அப்பத்தா’ – கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ..

“படத்துல இதுதான் பிரம்மாண்டமான செட்..
சினிமா

“படத்துல இதுதான் பிரம்மாண்டமான செட்.." சந்தானத்தின் மிரட்டலான ஹாரர் காமெடி படமான ‘DD Returns’ உருவானவிதம்.. - வைரல் வீடியோ உள்ளே..