கண்ணீர் விட்டு அழுத சின்னத்திரை நடிகை ரச்சிதா..! ஆறுதல் தெரிவிக்கும் ரசிகர்கள்.. பின்னணி இதோ..

கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட ரச்சிதா வைரல் பதிவு உள்ளே - rachitha mahalakshmi crying video with emotional note viral on internet | Galatta

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ மூலம் தொலைகாட்சி தொடர்களில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. அதை தொடர்ந்து பல சீரியல்களில் வாய்புகள் குவிந்தாலும் ரச்சிதா மகாலட்சுமி திரைபயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது ‘சரவணன் மீனாட்சி’ தொடர். ஏற்கனவே ரசிகர்களிடையே மிகப்பெரிய ஹிட் அடித்த சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாவது சீசனில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். அடுத்துத்த சரவணன் மீனாட்சி சீசன்களில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக சின்னத்திரையில் வலம் வந்தார். அதன்பின் ரச்சிதாவிற்கு பட வாய்ப்புகளும் குவிந்தது. ராத மோகன் இயக்கத்தில் வெளியான ‘உப்பு கருவாடு’ படத்தில் ஹீரோயினாகவும் வெள்ளித்திரையில் அறிமுகாமானர்.

நீண்ட நாட்களாக தொலைகாட்சியில் இடைவெளி விட்ட ரச்சிதா பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். போட்டியில் பல கிசுகிசுக்களில் சிக்கினாலும் நிதானமாகவும் சிறப்பாகவும் விளையாடி இறுதிச்சுற்று வரை தாக்கு பிடித்து விளையாடினார் ஏற்கனவே பிரபலமான ரச்சிதா பிக் பாஸ் மூலம் மேலும் பிரபலமடைய தற்போது அவருக்கு சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளும் குவிய தொடங்கியது.

திரைபயணத்தில் தொட்ட இடமெல்லாம் வெற்றி பெற்ற ரச்சிதாவிற்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வருகிறார். சின்னத்திரை நடிகர் தினேஷை கடந்த 2013 ல் மனமுடித்த ரச்சிதா  தொடர்ந்து இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட, சமீபத்தில் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். தொடர்ந்து இருவரை சுற்றியும் பல வதந்திகள் பரவ தொடங்கின,

பொதுவாகவே நடிகை ரச்சிதா சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஈடுபாடுடன் இருந்து வருபவர் அவரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். சமீப காலமாக ரச்சிதா சோகமான பதிவுகளாக பதிவிட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் நடிகை ரச்சிதா கண் கலங்கி கண்ணீர் விட்டு அழும் வீடியோவை நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம் பெற்ற ‘இதுவும் கடந்து போகும்’ பாடலுடன் பதிவிட்டுள்ளார்.

அதனுடன்,  "வலிமையான அனைத்து ஆன்மாவிற்காக,  கடந்த வருடங்களை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள் என்பதைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். அந்த மௌனப் போராட்டங்கள், உங்களைத் தாழ்த்தி, உங்கள் சொந்தக் கண்ணீரைத் துடைத்து, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக் கொண்ட தருணம்... இதுவும் கடந்து போகும்... இதுவும் கடந்து போகும்... இந்த பாடலின் ஆழத்திற்கு செல்கிறேன். அந்த மேஜிக்கல் வார்த்தைகள் எனது கண்களை குளமாக்குகிறது" என்ற வலியுடன் கூடிய வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். இதையடுத்து இணையத்தில் அவரது வீடியோ வைரலாக அவரது ரசிகர்கள் அந்த பதிவில் என்ன நடந்தது என்றும் ஆறுதல் தெரிவித்தும் வருகின்றனர். ரசிகர்களின் கனிவான கமெண்டுகளுடன் ரச்சிதாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடதக்கது.

 

 

View this post on Instagram

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

ஒடிடியில் வெளியாகும் ஊர்வசியின் 700வது திரைப்படம் ‘அப்பத்தா’ – கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ..
சினிமா

ஒடிடியில் வெளியாகும் ஊர்வசியின் 700வது திரைப்படம் ‘அப்பத்தா’ – கவனம் ஈர்க்கும் டிரைலர் இதோ..

“படத்துல இதுதான் பிரம்மாண்டமான செட்..
சினிமா

“படத்துல இதுதான் பிரம்மாண்டமான செட்.." சந்தானத்தின் மிரட்டலான ஹாரர் காமெடி படமான ‘DD Returns’ உருவானவிதம்.. - வைரல் வீடியோ உள்ளே..

சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறியது எப்படி.. இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் அசத்தலான வீடியோ இதோ..
சினிமா

சிவகார்த்திகேயன் மாவீரனாக மாறியது எப்படி.. இணையத்தில் ரசிகர்களால் வைரலாகும் அசத்தலான வீடியோ இதோ..