'இது டைகரின் கட்டளை!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட அடுத்த அதிரடி ட்ரீட்... 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட 2வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு,rajinikanth jailer movie second single release announcement | Galatta

ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் மற்றும் அதன் ரிலீஸ் தேதி தற்போது வெளியானது. என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. தற்போது சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கி வரும் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறிய போதும், அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் தயாராகும் படங்கள் ரசிகர்களுடைய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன அந்த வகையில், தற்சமயம் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் முக்கிய வேடத்தில் நடிக்க மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பகுதி படம் பிடிப்பை நிறைவு செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக முதல் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்க இருக்கிறார். இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில் வெளிவந்து ப்ரெண்டானது. நடிகை தமன்னாவின் துள்ளலான நடனமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் செம்ம ஸ்டைலும் கலந்து வெளிவந்த இந்த காவாலா பாடலை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. "ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்" என சூப்பர் ஸ்டாரின் மிரட்டலான குரலில் “இது டைகரின் கட்டளை” என படக்குழு குறிப்பிட்டிருக்கும் ஜெயிலரின் இரண்டாவது பாடல் வருகிற ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடியான அந்த அறிவிப்பு இதோ…
 

#Hukum 💥 Idhu Tiger-in Kattalai#JailerSecondSingle is ready to fire on July 17th 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi @kvijaykartik @Nirmalcutspic.twitter.com/5gqRMyXIcQ

— Sun Pictures (@sunpictures) July 13, 2023

நெல்சன்-அருண் மாதேஸ்வரன் வரிசையில் மீண்டும் தமிழ் இயக்குனருடன் சிவராஜ்குமார்... கேப்டன் மில்லர் தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு!
சினிமா

நெல்சன்-அருண் மாதேஸ்வரன் வரிசையில் மீண்டும் தமிழ் இயக்குனருடன் சிவராஜ்குமார்... கேப்டன் மில்லர் தயாரிப்பாளரின் அடுத்த படைப்பு!

'சிவகார்த்திகேயனுக்கு ஸ்வீட்டான சாபம் கொடுத்த மிஷ்கின்!'-  மாவீரன் பட விழாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

'சிவகார்த்திகேயனுக்கு ஸ்வீட்டான சாபம் கொடுத்த மிஷ்கின்!'-  மாவீரன் பட விழாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!

'செம்ம ஜாலி ரைடு கன்ஃபார்ம்!'- MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married பட கலக்கலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

'செம்ம ஜாலி ரைடு கன்ஃபார்ம்!'- MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married பட கலக்கலான ட்ரெய்லர் இதோ!