சந்தானத்தின் ஹாரர் காமெடி ட்ரீட்டாக வரும் DD ரிட்டன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... கலக்கலான புது GLIMPSE இதோ!

சந்தானத்தின் DD ரிட்டன்ஸ் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு,santhanam in dd returns movie release date announcement | Galatta

நடிகர் சந்தானம் நடிப்பில் பக்கா ஹாரர் காமெடி திரைப்படமாக வெளிவர இருக்கும் DD ரிட்டன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து நட்சத்திர காமெடியனாக கலக்கிய நடிகர் சந்தானம் தற்போது நகைச்சுவை மையப்படுத்திய திரைப்படங்களில் தொடர்ச்சியாக கதையின் நாயகனாக நடித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்திலிருந்து தனது புதிய பயணத்தை தொடங்கிய சந்தானம் தொடர்ந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, A1, டக்கால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் குளுகுளு மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்கான ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட திரைப்படங்கள் சந்தானம் நடிப்பில் வெளிவந்தனர்.

முன்னதாக பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமாக சந்தானம் நடித்திருக்கும் கிக் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இதனிடையே சந்தானத்தின் அடுத்த நகைச்சுவை சரவெடியாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் DD ரிட்டர்ன்ஸ். ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் C.ரமேஷ் குமார் தயாரிப்பில் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இந்த DD ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடிகை சுரபி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த DD ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு தீபக் குமார் பதி ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்ய OFRO இசை அமைத்திருக்கிறார். மோகன் கலை இயக்கத்தில் ஹரி கணேஷ் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கும் DD ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு சாண்டி மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த DD ரிட்டன்ஸ் திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது DD ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜூலை மாதம் வருகிற 28ஆம் தேதி DD ரிட்டன்ஸ் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றையும் DD ரிட்டன்ஸ் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிரட்டலான ஹாரர் மற்றும் கலக்கலான காமெடி ஒன்றிணைந்த ட்ரீட்டாக வந்த இந்த DD ரிட்டன்ஸ் புது ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சந்தானத்தின் DD ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கும் வகையில் வெளிவந்த அந்த புது ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

Step into a world of mystery, unfriendly but funny ghosts, and unforgettable family fun! Our captivating escape room games bring the magic of a kids and family movie to life. Don't miss #DDReturns, premiering on July 28th at your nearest theatres!
TRAILER FROM TOMORROW 👻😈 pic.twitter.com/i8zCezNtui

— Santhanam (@iamsanthanam) July 13, 2023

'சிவகார்த்திகேயனுக்கு ஸ்வீட்டான சாபம் கொடுத்த மிஷ்கின்!'-  மாவீரன் பட விழாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!
சினிமா

'சிவகார்த்திகேயனுக்கு ஸ்வீட்டான சாபம் கொடுத்த மிஷ்கின்!'-  மாவீரன் பட விழாவின் ட்ரெண்டிங் வீடியோ இதோ!

'செம்ம ஜாலி ரைடு கன்ஃபார்ம்!'- MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married பட கலக்கலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

'செம்ம ஜாலி ரைடு கன்ஃபார்ம்!'- MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married பட கலக்கலான ட்ரெய்லர் இதோ!

இயக்குனர் வசந்த பாலன் - 'கைதி' அர்ஜுன் தாஸின் அநீதி... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான டீசர் இதோ!
சினிமா

இயக்குனர் வசந்த பாலன் - 'கைதி' அர்ஜுன் தாஸின் அநீதி... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான டீசர் இதோ!