தளபதி விஜய் முதல் அனிருத் வரை.. ரசிகர்களின் கேள்விக்கு அசராமல் பதிலளிக்கும் ஷாருக் கான்.. – அட்லியின் ‘ஜவான்’ படம் குறித்து குவியும் அப்டேட்டுகள்..

ஜவான் படம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வரும் ஷாருக் கான் - Shah rukh khan reply all fans tweet about atlee jawan | Galatta

இந்திய திரையுலகில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் மிக முக்கியமான திரைப்படம் ‘ஜவான்’. பாலிவுட்டின் கிங் கான் சூப்பர்ஸ்டார் ஷாருக் கான் நடிப்பில் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகும் அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பக்கா ஆக்ஷன் விருந்தாக உருவாகும் இப்படத்தில் ஷாருக் கான் ஹீரோவாக நடிக்க மேலும் படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கின்றார். இவர்களுடன் பிரியா மணி, சானியா மல்ஹோத்ரா, யோகிபாபு, அமிர்தா ஐயர் ஆகியோர் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.  சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.  ஜவான் திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இந்தியில் மட்டுமல்ல நாடு முழுவதும் அதிகரித்தது. மாஸ் காட்சிகளுடன் உலகளவில் வசூல் வேட்டையை துவங்க வரும் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிகட்ட பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில் ஷாருக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ASK SRK என்ற ஹேஷ்டெக்குடன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இணையத்தில் ரசிகர்கள் மலை மலையாய் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதில் சில முக்கிய கேள்விகளுக்கு ஷாருக் கான் பதிலளித்து வருகிறார். அதில் ஜவான் திரைப்படம் குறித்து ஷாருக் கான் கொடுத்த அப்டேட்டுகளின் சிறப்பு தொகுப்பு இந்த கட்டுரை..

ரசிகர் ஒருவர் ஜவான் சிறப்பு முன்னோட்டம் குறித்து உங்கள் இளையமகன் அப்ரம் என்ன சொல்கிறார் என்று கேட்கையில்,

அதற்கு ஷாருக் கான், “அவருக்கு ஜவான் பட முன்னோட்டதில் அனிருத்தின் இசை மிகவும் பிடித்தது. குறிப்பாக அந்த விசில்!!”  என்றார்.

He loves the title music given by Anirudh. The whistle especially! #Jawan https://t.co/YRY8sK0zj5

— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023

தென்னிந்திய ரசிகர்கள் குறித்து கேட்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தென்னிந்திய மக்களுடன் தான் பணியாற்றி வருகிறேன். நான் இப்போது தென்னிந்தியாவிற்கு ரசிகராக உள்ளேன்”என்று பதிலளித்துள்ளார்.

Right now working with an all south unit for two years I am myself a South Fan bro!! #Jawan https://t.co/1TUOcn0Rvf

— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023

ரசிகர் ஒருவர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் பணியாற்றிய அனுபம் குறித்து கேட்கையில், “மிகுந்த மரியாதையையும் அன்பையும் கொண்ட நயன்தாரா இனிமையானவர். விஜய் சார் வெறித்தனமான நடிகர். இருவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்” என்று பதிலளித்துள்ளார்.

 

Nayan is the sweetest of them all. Too much love and respect. Vijay sir is a ‘mad’ actor in a awesome way. So much to learn from both actually. #Jawan https://t.co/HUo4yZ9r5M

— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023

அதை தொடர்ந்து ஜவான் படதின் பாடல் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு அவர், “வருகிறது வருகிறது. அதற்கான வேலையில் தற்போது அட்லி உள்ளார்.  அருமையான பாடல் ஷோபி யுடன் பணியாற்றியது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Aayega aayega. Farah and Vaibhavi working hard with Atlee to edit and get them ready. Lovely songs they have done and Shobi too. #Jawan https://t.co/Y7TFsw3wUy

— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023

நீங்கள் ஜவான் படப்பிடிப்பில் முதல் கற்றுக் கொண்ட விஷயம் என்ன? என்ற கேள்விக்கு “நான் முதலில் தமிழில் சில வரிகள் பாட கற்றுக் கொண்டேன். யூனிட்டில் இருந்தவர்கள் அனைவரும் இனிமையானவர், சென்னை மக்கள் என்னை ஊக்கபடுத்தி கொண்டே வருகின்றனர்." என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Sing a few lines of a song in Tamil!!! The whole unit was so sweet in Chennai encouraging me to get it right! #Jawan https://t.co/ld5C86Mftq

— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023

பின் தொடர்ந்து ஜவான் படத்தின் கதாபாத்திரத்திற்காக நிறைய படங்கள் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு ஷாருக் கான். “நான் அட்லி படங்களை பார்த்தேன். அதன்பின் விஜய் சார், அல்லு அர்ஜுன் ஜி, ரஜினி சார், யாஷ் மற்றும் மற்ற நடிகர்களின் படங்களையும் பார்த்து மொழி மற்றும் பாவனைகளை கற்று கொண்டேன்.  அதன்பின் என் கதாபாத்திற்கு தேவையானதை மேருகேற்றினேன்.” என்றார் ஷாருக் கான்.

I watched a lot of films of Atlee. Vijay sir. Allu Arjun ji. Rajni sir. Yash and loads of other stars to understand the language of expression for the world that was being created. And yes then prepped for my own character too. #Jawan https://t.co/F23f2YY2sU

— Shah Rukh Khan (@iamsrk) July 13, 2023

தற்போது ஷாருக் கான் அவர்களின் பதில் இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. 

‘மாவீரன்’ வெற்றியை உறுதி செய்த உதயநிதி ஸ்டாலின்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..
சினிமா

‘மாவீரன்’ வெற்றியை உறுதி செய்த உதயநிதி ஸ்டாலின்.. – உற்சாகத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..

நானியின் 30வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. சர்ப்ரைஸ் வீடியோவுடன் வைரலாகும் அப்டேட் உள்ளே.
சினிமா

நானியின் 30வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. சர்ப்ரைஸ் வீடியோவுடன் வைரலாகும் அப்டேட் உள்ளே.

‘என் இதய துணைவியே ஆரத்யா..’ சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான காதல் பாடல் இதோ..
சினிமா

‘என் இதய துணைவியே ஆரத்யா..’ சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான காதல் பாடல் இதோ..