சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் அரசியலா..? படக்குழுவிற்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்..

சிவகார்த்திகேயனின் மாவீரனுக்கு நிபந்தனை வைத்த உயர்நீதிமன்றம் - High court order to sivakarthikeyan maaveeran movie controversial scenes | Galatta

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பின் மத்தியில் வெளியாகவிருக்கும்  நாளை வெளியாகவிருக்கும் ‘மாவீரன்’. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும்  இப்படத்தை இயக்கியுள்ளார்  மடோன் அஷ்வின். பேண்டசி கதைகளத்தில் ஆக்ஷன்  திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். மேலும் படத்தில் இயக்குனர் மிஷ்கின்,  சரிதா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், மோனிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார்.

முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று அதிகம் பேசப்பட்டது. அதன்படி ரசிகர்களின் ஆரவார கொண்டாத்துடன் நாளை மாவீரன் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் மகாவீரடு என்ற பெயரிலும் உலகளவில் வெளியாகவுள்ளது.  படத்திற்கான முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் படத்தில் வில்லனாக வரக்கூடிய மிஷ்கின் அவர் சார்ந்துள்ள கட்சியின் கொடி தங்களது கட்சியின் கொடி என்றும் எனவே அந்த காட்சிகளை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  படத்தில் இது போன்ற கட்சியின் அடையாளத்தை காட்டும் பது அந்த கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதுடன் அது மக்களிடம் தவறான பிம்பத்தையும் கொடுக்கும். அதனால் படத்தில் இடம் பெரும் அரசியல் கட்சியின் வண்ணம் மாற்ற வேண்டும் என்று மனுதரப்பு வழக்கறிஞர் முன் வைத்தார்.

இதையடுத்து சாந்தி டாக்கீஸ் தரப்பு வழக்கறிஞர், குறிப்பிடப்படும் நிறங்கள் வேறு வகையானது. மேலும் அதனை மாற்ற வேண்டும் என்றால் 10 லிருந்து 20 நாட்கள் அவகாசம் தேவைபடும். திரைப்படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகவில்லை என்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று தனது வாதத்தை முன் வைத்தார்.

இறுதியாக வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாவீரன் படம் துவங்கும் முன் 40 வினாடிகள் எந்த கட்சியயையும் குறிப்பிடவில்லை என்று பொறுப்பு துறப்பு வெளியிட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து ஒடிடியில் வெளியிடும் முன்பு இந்திய ஜனநாயக கட்சியின் கொடி பிரதிபலிக்கும் காட்சிகளை மாற்றிய பின்னரே வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு பின் மாவீரன் குறிப்பிட்ட நாளில் நாளை பிரம்மாண்டமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

‘என் இதய துணைவியே ஆரத்யா..’ சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான காதல் பாடல் இதோ..
சினிமா

‘என் இதய துணைவியே ஆரத்யா..’ சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படக்குழுவினர் வெளியிட்ட அட்டகாசமான காதல் பாடல் இதோ..

“சுயநலத்திற்காக சிலர் செய்யும் செயல் வீணானது..” விமர்சனங்களை அடித்து நொறுக்கிய விஷ்ணு விஷாலின் பதிவு..
சினிமா

“சுயநலத்திற்காக சிலர் செய்யும் செயல் வீணானது..” விமர்சனங்களை அடித்து நொறுக்கிய விஷ்ணு விஷாலின் பதிவு..

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘தேனிசை தென்றல்’ தேவா.. – திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்த ‘மாமன்னன்’ படத்தின் ‘நெஞ்சமே’ பாடல் இதோ..
சினிமா

ஏ ஆர் ரஹ்மான் இசையில் ‘தேனிசை தென்றல்’ தேவா.. – திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்த ‘மாமன்னன்’ படத்தின் ‘நெஞ்சமே’ பாடல் இதோ..