சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட காவாலா பாடல் உருவான விதம்... ரஜினிகாந்த் - தமன்னாவின் ஃட்ரெண்டாகும் மேக்கிங் வீடியோ இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட காவாலா பாடல் மேக்கிங் வீடியோ,rajinikanth in jailer movie first single kaavaalaa song making video out now | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடலின் மேக்கிங் வீடியோ வெளியானது.  தனது திரைப்பயணத்தில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கடந்தும் இன்றும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்து வரவேற்பை பெற தவறியது. இருப்பினும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் அடுத்தடுத்த திரைபடங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன அந்த வகையில், தற்சமயம் தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொய்தீன் பாய் எனும் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வந்த ரஜினிகாந்த் அவர்கள் லால் சலாம் படப்பிடிப்பில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். விரைவில் இதர அறிவிப்புகள் வெளியாகவன எதிர்பார்க்கப்படுகிறது

இதனைத் தொடர்ந்து லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கும் தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்க இருக்கிறார். அடுத்ததாக முதல் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கும் ஜெயிலர் படத்தில் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் ஆகியோர் மிக முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரல் ஹிட்டாகியுள்ளது. சூப்பர் ஸ்டாரின் செம்ம ஸ்டைலும் தமன்னாவின் துள்ளலான நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த காவாலா பாடலின் பிரத்தியேக மேக்கிங் வீடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. ட்ரெண்டாகும் அந்த மேக்கிங் வீடியோ இதோ…
 

And that's how we got the world grooving 💃 It's 30M+ views for #Kaavaalaa

https://t.co/Pd7nBg8h4l@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @tamannaahspeaks @Arunrajakamaraj @shilparao11 @AlwaysJani #Jailer pic.twitter.com/umDiM3jDCd

— Sun Pictures (@sunpictures) July 13, 2023

'செம்ம ஜாலி ரைடு கன்ஃபார்ம்!'- MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married பட கலக்கலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

'செம்ம ஜாலி ரைடு கன்ஃபார்ம்!'- MSதோனி தயாரித்துள்ள ஹரிஷ் கல்யாணின் Let's Get Married பட கலக்கலான ட்ரெய்லர் இதோ!

இயக்குனர் வசந்த பாலன் - 'கைதி' அர்ஜுன் தாஸின் அநீதி... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான டீசர் இதோ!
சினிமா

இயக்குனர் வசந்த பாலன் - 'கைதி' அர்ஜுன் தாஸின் அநீதி... கவனத்தை ஈர்க்கும் மிரட்டலான டீசர் இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட அசத்தலான புது ட்ரீட்... ரசிகர்களை கவரும் லேடி லக் வீடியோ பாடல் இதோ!
சினிமா

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட அசத்தலான புது ட்ரீட்... ரசிகர்களை கவரும் லேடி லக் வீடியோ பாடல் இதோ!