உலகளவில் புகழையும் ,பெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவர் பிரபல ஹிந்தி நடிகை சன்னி லியோன்.இவரது வாழ்க்கை வரலாறு Web series ஆக வெளியிடப்பட்டது.இந்த தொடர் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

செம பிஸியாக மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.இவர் நடித்த சூப்பர்ஹிட் படமான ராகினி எம்.எம்.எஸ் படத்தினை வெப் சீரிஸாக எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து அசத்தி வந்தார் சன்னி லியோன்.கடந்த வருடமும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் சன்னி லியோன் தனது புகைப்படங்கள் விடீயோக்கள் பகிர்ந்து வந்தார் சன்னி லியோன்,

இவர் சமீபத்தில் ஹரிதாஸ்,சினம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குனர் GNR குமரவேலனை சந்தித்துள்ளார்,தற்போது இவர் ஹீரோயினாக நடிக்கும் தமிழ் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.சிந்தனை செய் படத்தை இயக்கிய யுவன் இந்த படத்தை இயக்குகிறார்.சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர்கள் சதீஷ், மொட்டை ராஜேந்திரன்,ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.ஹாரர் காமெடி படமாக இந்த படம் உருவாகவுள்ளது.