“கொலை மிரட்டல்களை சந்தித்தேன்..!” கேன்ஸ் பட விழாவில் உருக்கமாக பேசிய நடிகை சன்னி லியோன்.. விவரம் இதோ

கேன்ஸ் பட விழாவில் உருக்கமாக பேசிய சன்னி லியோன் - Sunny leone emotional speech at cannes 2023 | Galatta

ரசிகர்களின் மனதை தன் கவர்ச்சியான நடிப்பினால் கவர்ந்த நடிகை சன்னி லியோன். ஆரம்பத்தில் ஆபாச படத்தின் மூலம் பிரபலமடைந்த இவர், பின் இந்தியில் கடந்த 2011 ல் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் 5 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட சன்னி லியோன் 49 நாட்களில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். சிறப்பான விளையாட்டினால் வெகுஜன ரசிகர்களின் அபிப்பிராயத்தை பெற்றார்.

பின் கடந்த 2012 ல் வெளியான ‘ஜிஸ்ம் 2’ திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் சன்னி லியோன். அதன்பின்  பல படங்களில் மிக‌ முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகிலும் கவனம் பெற்றார். பின் தொடர்ந்து இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி போன்ற மொழி படங்களிலும் நடித்து இந்திய அளவு பிரபலமானார். தமிழில் இவர் ஜெய் நடித்து வெளியான ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றம் அளித்தவர் தொடர்ந்து தமிழில் 'ஓ மை கோஸ்ட்', 'கொட்டேஷன் கேங்க்' ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது சன்னி லியோன் தமிழில் கதாநயாகியாக 'வீரம்மாதேவி' என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்ககத்தில் 'கென்னடி' என்ற படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் வெளியாகவிருக்கும் 'கென்னடி' திரைப்படம் சமீபத்தில் நடந்து கொண்டிருக்கும் 'கேன்ஸ் 2023' திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தின் திரையிடலுக்கு படக்குழுவினருடன் படத்தின் நாயகி சன்னி லியோனும் கலந்து கொண்டார் அட்டகாசமான ஆடையில் ரெட் கார்பெட்டில் வருகை தந்து இணையத்தில் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறார் நடிகை சன்னி லியோன். திரையிடலுக்கு பின் பேசிய நடிகை சன்னி லியோன்  தன் திரைப்பயணம் குறித்து உருக்கமாக பேசினார்

“ஆரம்ப காலத்தில் நான் ஆபாச படங்களில் நடித்து வந்தேன். அதற்கு பின் தான் தொலைக்காட்சி மற்றும் பாலிவுட்டிற்கு வந்தேன். அப்போது நான் எதிர்கொண்ட பிரச்சனைகள், விமர்சனங்கள் அதிகம்.  நான் என் கணவரிடம் இந்தியாவிற்கு வரவில்லை என்று பல முறை கூறியுள்ளேன். ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் என்னை இந்தியாவிற்கு அழைத்து வந்தார். என்னை அவர் தான் பிக் பாஸ் போட்டியிலும் பங்கேற்க வைத்தார். அந்த நிகழ்ச்சியின் மூலம் தான் என்னை பற்றிய பார்வை மக்களுக்கு மாறி ஒவ்வொரு இந்திய ரசிகர்களின் அபிப்ராயத்தை பெற்றேன். பின் அவர்கள் என்னை நடிகையாக ஏற்று கொண்டனர்.

ஆரம்ப காலத்தில் திரையுலகில் அடியெடுத்து வைத்த எனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததது. என்னை சினிமாவில் நடிக்க கூடாது என்று பலர் மிரட்டியுள்ளனர். இவ்வளவு தடைகளையும் தான்டி தற்போது உங்கள் முன் நடிகையாக நின்று கொண்டிருக்கிறேன்.” என்று குறிப்பிட்டார் நடிகை சன்னி லியோன்.

கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள கென்னடி திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியான மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடமிருந்து பெற்றது. இயக்குனர் அனுராக் காஷ்யப் வெற்றி திரைப்படங்களின் வரிசையில் கென்னடி திரைப்படம் அமையும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரபல இசையமைப்பாளர் ராஜ் மறைந்தார்.. ஏ ஆர் ரஹ்மான் உருக்கம்.. – விவரம் இதோ..
சினிமா

பிரபல இசையமைப்பாளர் ராஜ் மறைந்தார்.. ஏ ஆர் ரஹ்மான் உருக்கம்.. – விவரம் இதோ..

பிரபல பாலிவுட் இயக்குனரை நிராகரித்த சியான் விக்ரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு.. – பின்னணி இதோ..
சினிமா

பிரபல பாலிவுட் இயக்குனரை நிராகரித்த சியான் விக்ரம்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு.. – பின்னணி இதோ..

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர், ரசிகர்கள் .. – விவரம் இதோ..
சினிமா

பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்... இரங்கல் தெரிவிக்கும் திரையுலகினர், ரசிகர்கள் .. – விவரம் இதோ..