'விஜய்’ செல்லம் என்ன வந்து கொஞ்சிருச்சு!- லியோ பட அனுபவத்தை பகிர்ந்த மிஷ்கின்... வைரலாகும் அட்டகாசமான வீடியோ இதோ!

லியோ படம் குறித்து பேசிய இயக்குனர் மிஷ்கினின் வீடியோ,mysskin about working with thalapathy vijay in leo movie | Galatta

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை இயக்குனர் மிஷ்கின் பகிர்ந்து கொண்டார். அடுத்ததாக தனது தொலைபேசியில் 68வது படமாக தயாராகும் தளபதி 68 படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக தளபதி விஜய் இணைகிறார். இத்திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்த தளபதி விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுடன் இணைந்து  மேயாத மான், ஆடை மற்றும் குலு குலு ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். முன்னதாக தொடர்ந்து 50 நாட்கள் காஸ்மீரில் நடைபெற்ற லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது அடுத்த கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் அன்று லியோ திரைப்படத்தின் ஸ்பெஷல் பரிசு ஒன்று ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என தயாரிப்பாளர் அறிவித்திருந்தார். 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் அருள்நிதி நடிப்பில் நாளை மே 26 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் ஸ்பெஷல் பிரிமியர் காட்சியை காண வந்த இயக்குனர் மிஷ்கின் படத்தை பார்த்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது லியோ திரைப்படம் குறித்தும் பேசினார். அப்படி பேசுகையில், “லியோ படம் முடிந்துவிட்டது விஜய் பற்றி சொல்லவே தேவையில்லை 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறேன் அப்படியே செல்லம் என்னை வந்து கொஞ்சிருச்சு! அந்தப் படமும் பெரிய வெற்றி அடையும் எல்லா படங்களும் வெற்றி அடையும் எல்லா படங்களும் வெற்றி அடைய வேண்டும்” என மிஷ்கின் தெரிவித்துள்ளார் சமூக வலைதளங்களில் வைரலாகும் மிஷ்கின் பேசிய அந்த வீடியோ இதோ…
 

#Leo-ல விஜய் செல்லம் என்ன வந்து கொஞ்சிருச்சு..😍#Mysskin #ThalapathyVijay #Sivakarthikeyan #Maaveeran #LeoUpdate #LokeshKanagaraj #MaaveeranUpdate #Galatta pic.twitter.com/mZyQsJYEMI

— Galatta Media (@galattadotcom) May 24, 2023

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - அருள்நிதி - டாடா தயாரிப்பாளரின் அதிரடியான கழுவேத்தி மூர்க்கன்… கவனத்தை ஈர்க்கும் ஸ்னீக் பீக் வீடியோ இதோ
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - அருள்நிதி - டாடா தயாரிப்பாளரின் அதிரடியான கழுவேத்தி மூர்க்கன்… கவனத்தை ஈர்க்கும் ஸ்னீக் பீக் வீடியோ இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ!

சினிமா

"தளபதி விஜயின் லியோ உடன் மோதும் டைகர்!"- முன்னணி நட்சத்திர நடிகரின் பிரம்மாண்டமான PAN INDIA படம்... மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் GLIMPSE இதோ!