மம்மூட்டி - ஜோதிகா இணைந்து நடித்த முதல் படம்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அசத்தலான GLIMPSE இதோ!

மம்மூட்டி - ஜோதிகா நடித்த காதல் தி கோர் பட செகண்ட் லுக் வெளியீடு,mammootty and jyotika in kaathal the core movie second look poster | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரிட் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வரும் நடிகை ஜோதிகா முதல் முறையாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த திரைப்படம் காதல் - தி கோர். ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் காதல் - தி கோர் திரைப்படத்தின் புதிய சர்ப்ரைசை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.  கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக ரசிகர்களை தனது சிறந்த நடிப்பால் மகிழ்வித்து வரும் நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் பீஷ்ம பருவம், சிபிஐ 5 - தி ப்ரைன், புழு, ப்ரியன் ஒட்டத்திலானு, RORSCHACH ஆகிய படங்கள் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கமாலி டைரி & ஜல்லிக்கட்டு படங்களின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் மம்முட்டி நடித்து வெளிவந்த நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதனை அடுத்து பிப்ரவரியில் மம்முட்டின் நடிப்பில் வெளிவந்த கிரிஸ்டோபர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கண்ணூர் ஸ்குவாட் மற்றும் கடுகன்னவா ஒரு யாத்ரா ஆகிய படங்கள் அடுத்தடுத்து மம்முட்டி நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறிய ப்ரேக் எடுத்துக் கொண்ட ஜோதிகா பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு, மலையாளத்தில் நடிகை மஞ்சுவாரியர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹொவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமேக்காக 36 வயதினிலே படத்தில் நடித்தார். தொடர்ந்து கதாநாயகியை முன்னிறுத்தும் கதை களங்கள் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அடுத்ததாக நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள நடிகை ஜோதிகா, "ஸ்ரீ" எனும் சூப்பர் நேச்சுரல் திரில்லர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே முதன்முறையாக நடிகர் மம்மூட்டியுடன் இணைந்த ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் தான் காதல் - தி கோர். 

இப்படத்தில் லாலு அலெக்ஸ் முத்துமணி சின்னு சாந்தினி சுதி கோழிக்கோடு அனகா அக்கு உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி இயக்கும் காதல் - தி கோர் திரைப்படத்தை Wayfarer Films மற்றும் Mammootty Kampany ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். காதல் - தி கோர் படத்திற்கு ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்ய, மேத்யூஸ் புலிக்கண் இசையமைக்கிறார். காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு  கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்திற்குள் முடிவடைந்தது. காதல் தி கோர் படத்தின் ரிலீஸ் ஆகும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கும் நிலையில் தற்போது சர்ப்ரைஸாக படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த போஸ்டர் இதோ…
 

Here is the Much Awaited Second Look Poster of @KaathalTheCore@mammukka #Jyotika #KaathalTheCore @DQsWayfarerFilm @Truthglobalofcl #Mammootty pic.twitter.com/aGt4sfT4My

— MammoottyKampany (@MKampanyOffl) May 24, 2023

வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலிSதாணு உடன் கைகோர்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்... புதிய பிரம்மாண்ட பட மாஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

வாடிவாசல் தயாரிப்பாளர் கலைப்புலிSதாணு உடன் கைகோர்த்த கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்... புதிய பிரம்மாண்ட பட மாஸ் அறிவிப்பு இதோ!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - அருள்நிதி - டாடா தயாரிப்பாளரின் அதிரடியான கழுவேத்தி மூர்க்கன்… கவனத்தை ஈர்க்கும் ஸ்னீக் பீக் வீடியோ இதோ
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - அருள்நிதி - டாடா தயாரிப்பாளரின் அதிரடியான கழுவேத்தி மூர்க்கன்… கவனத்தை ஈர்க்கும் ஸ்னீக் பீக் வீடியோ இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வேற லெவல் அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஷ்கின்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் வீடியோ இதோ!