விஜய் உடன் மாநகரம் & மைக்கேல் நடிகர் சந்தீப் கிஷன்... ட்ரெண்டாகும் தளபதி 67 படப்பூஜையின் புதிய புகைப்படம்!

தளபதி 67 பூஜையில் விஜய் உடன் சந்தீப் கிஷன் இருக்கும் புகைப்படம்,sundeep kishan shared photo with vijay at thalapathy 67 pooja | Galatta

பல கோடி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரட் நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மலையாள நடிகர் மேதீவ் தாமஸ், பிரியா ஆனந்த் ஆகியோருடன் இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், தளபதி 67 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை வீடியோ நேற்று பிப்ரவரி 1ம் தேதி வெளியானது. முன்னதாக லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியுள்ள மைக்கேல் திரைப்படம் நாளை பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடும் மைக்கேல் திரைப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய சந்தீப் கிஷன், தளபதி 67 படத்தின் படப்பூஜைக்கு தான் சென்றதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது தளபதி 67 படப்பூஜையின் போது தளபதி விஜய் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "மைக்கேல் படத்தின் மீது நீங்கள் காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்காகவும் உங்களின் அன்பான வார்த்தைகளுக்காகவும் என் அன்பிற்குரிய தளபதிக்கு நன்றி!" என குறிப்பிட்டு "மைக்கேல் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது" என தெரிவித்துள்ளார். தளபதி விஜய் உடன் தளபதி 67 படப்பூஜையில் சந்தீப் கிஷன் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் இதோ…
 

Thank You Dearest Thalapathy for your kind words , love and support for #Michael 🤍
Thank you for being so Humble & Inspiring 🤍
Love you anna 🤍@Dir_Lokesh presents a @jeranjit film ...#Michael in theatres Tomorrow 🤍#Thalapathy67 pic.twitter.com/RaHRFsWrZR

— Sundeep MICHAEL-Feb 3rd Kishan (@sundeepkishan) February 2, 2023

தளபதி 67 படப்பூஜை வீடியோவில் கைதி கனெக்ட்... LCU குறித்த HINT என ரசிகர்கள் உற்சாகம்! விவரம் உள்ளே
சினிமா

தளபதி 67 படப்பூஜை வீடியோவில் கைதி கனெக்ட்... LCU குறித்த HINT என ரசிகர்கள் உற்சாகம்! விவரம் உள்ளே

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு விழா எப்போது..? வைரலாகும் அறிவிப்பு வீடியோ இதோ!
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த தனுஷின் வாத்தி பட இசை வெளியீட்டு விழா எப்போது..? வைரலாகும் அறிவிப்பு வீடியோ இதோ!

பிக்பாஸ் முடித்த கையோடு மீண்டும் விஜய் டிவியில் ஷிவினுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு... அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

பிக்பாஸ் முடித்த கையோடு மீண்டும் விஜய் டிவியில் ஷிவினுக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பு... அட்டகாசமான வீடியோ இதோ!