தமிழ் திரையுலகில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படங்களால் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் சுந்தர்.சி. சிறந்த இயக்குனரான சுந்தர்.சி, சீரான தயாரிப்பாளரும் கூட. சுந்தர்.சி-யின் தயாரிப்பு நிறுவனமான அவ்னி மூவீஸ் மூலம் இதுவரை ஹலோ நான் பேய் பேசுறேன், முத்தின கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்துள்ளார். 

தற்போது 6வது திரைப்படத்தை தயாரிக்க லாக்டவுன் காலகட்டத்தில் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் விதிமுறைகளை ஏற்று இன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது படக்குழு. படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சென்னையில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும்.

மத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்தபோது பலரின் வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்பட்டது. அப்படி பிரசன்னா, ஷாம் மற்றும் அஸ்வின் மூவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகளை நகைச்சுவையாக கூறுவதே இப்படத்தின் மையக்கரு என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் பிரசன்னா, ஷாம், ஸ்ருதி மராத்தே, அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர். மனோகர், ரித்திகா சென், மாஸ்டர் சக்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். சத்யா இசையமைக்க, கிச்சா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக பிரேமும் மற்றும் நடன இயக்குநராக தினேஷும் பணியாற்றுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வை பி.பாலகோபி.

கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக அரண்மனை 3 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார் சுந்தர்.சி ஆனால், லாக்டவுனால் ஷூட்டிங் முற்றிலும் முடங்கியது. மேலும், தற்போது ஷூட்டிங்கில் 75 பேர்தான் கலந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் இருப்பதால் கரோனா அச்சுறுத்தல் முடிவடைந்த பிறகு படத்தின் ஷூட்டிங்கை தொடங்கலாம் என்னும் திட்டத்தில் உள்ளார் சுந்தர்.சி. 

தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். அவ்னி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், விவேக் முக்கிய ரோலில் ரோலில் நடிக்கின்றனர். சத்யா இசையமைக்கிறார்.  அரண்மனை-3 படத்தின் படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. ராஜ்கோட்டில் அமைந்துள்ள பிரம்மாண்ட அரண்மனையை தேர்ந்தெடுத்து, படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சுந்தர்.சி.