தாலி, மெட்டியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு நீ்ட் தேர்வு எழுதச் சென்ற புதுமணப் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தமிழக பண்பாட்டு கலாச்சாரங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறதா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வால், அன்று முதல் இன்று வரை சர்ச்சைகள் மட்டும் புதிது புதிதாக வெடித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், சர்ச்சைகள் ஏற்பாடமல் இருப்பதும், சர்ச்சைக்குறிய கருத்துக்களை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதுமே ஒரு தகுதியான அரசின் அழகான வெளிப்பாடுகள். ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முதல், பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, உள்ளிட்ட பெரும்பாலன திட்டங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் சர்ச்சைகளையும் போராட்டத்திற்கான களத்தையும் அமைத்து கொடுத்தது.

ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த மற்ற விசயங்கள் எல்லாம் தற்போது சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், நீட் தேர்வு சர்ச்சைகள் மட்டும் தொடர்ந்து உயிர் பழியை கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் படி, தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பங்களும் அரங்கேறி உள்ளன. நீட் தேர்வு உயிர் பழிகள் இனியும், நாளையும் நடக்கும் என்ற விமர்சனங்களும் தற்போது எழுந்துள்ளன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற நீ்ட் தேர்வில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சை தமிழ் நாட்டில் வெடித்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் உள்ள 238 மையங்களில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுதியதாக தெரிகிறது. 

நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்வு நடந்த இந்த தேர்வுக்காக, அதிகாலை முதலே தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவ, மாணவியர் காத்திருந்த நிலையில், பல்வேறு கட்ட கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். 


அத்துடன், தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனையும் செய்யப்பட்டன. தேர்வு மைய வளாகத்தில் தனி மனித இடைவெளியை மாணவர்கள் கடைப்பிடிக்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் தனித் தனியாக வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. 

எனினும், தேர்வறைக்குள் மாணவ மாணவிகள் அடையாள அட்டை, ஹால் டிக்கெட், சானிடைசர், தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், திருமணம் ஆன மாணவிகள் தாலியை கூட கழுத்தில் அணிந்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படி, நெல்லை மாவட்ட தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த ஒரு புதுமண பெண்மணி, தனக்கு திருமணம் ஆன 4 வது மாதத்திலேயே தன் எழுத்தில் இருந்த தாலியை தானே கழற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த இளம் பெண் முத்துலட்சுமிக்கும், வாசுதேவனுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீட் தேர்வு எழுத வந்த அந்த மாணவியை, அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி, பூ மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றிச் சொல்லி அங்கிருந்தவர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நீ்ட் தேர்வு எழுதச் சென்ற அந்த புதுமணப்பெண் தாலி, பூ, காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி தன் கணவரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார்.

இதனை அங்கு நின்றவர்கள், வேதனையுடனுடன் அதிர்ச்சியுடனும் பார்த்தார்கள். அத்துடன், இந்த காட்சிகளை அங்கு நின்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினர். இதன் காரணமாக, நீட் தேர்வு தற்கொலை சர்ச்சைகளுக்கு இணையாக, இந்த தாலி சர்ச்சைகளும் இணையத்தில் வெடித்து உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு தான் பிரச்சனை என்றாலும், அந்த நீட் தேர்வு விதிமுறைகளில் கூட தமிழக பண்பாட்டு கலாச்சாரங்கள் பின்பற்றாமல், அதனை திட்டமிட்டே அழிக்கும் வேலைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு செய்து வருவதாக அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு எந்த சலனமும் இன்றி, இயல்பாகவே கடந்துச் செல்லும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே,  நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி நீட்டுக்கு எதிரான வாசகத்துடன் கூடிய மாஸ்க்கை அணிந்து டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.