அதிரடி ஆக்சனில் இறங்கிய உலகநாயகன் கமல்ஹாசன்... Hவினோத்தின் KH233 படத்திற்காக துப்பாக்கி சூடும் பயிற்சி! மிரட்டலான வீடியோ இதோ

Hவினோத்தின் KH233 படத்திற்காக துப்பாக்கி சூடும் பயிற்சியில் கமல்ஹாசன்,ulaganayagan kamal haasan gun shooting training for kh233 movie | Galatta

இயக்குனர் Hவினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் KH33 திரைப்படத்திற்காக பிரத்தியேகமாக துப்பாக்கி சூடும் பயிற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார். ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் வியந்து பார்க்கும் கலைஞானியாக திகழும் உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் முதலாவதாக மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாலிக் திரைப்படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கமல்ஹாசன் அவர்களே முன்பு தெரிவித்து இருந்தார். இத்திரைப்படத்திற்கு திரைக்கதையும் அவரே எழுதுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அந்த திரைக்கதை எழுதும் பணியையும் கமல்ஹாசன் தொடங்கியிருந்தார். அதேபோல் இயக்குனர் பா.ரஞ்சித் விருமாண்டி திரைப்படத்தின் பாணியில் மதுரையை கதைக்களமாக வைத்து ஒரு படம் இயக்குவதாக விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அதற்கான அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளி வந்தன.  

இந்த வரிசையில் தனது திரைப் பயணத்தில் 234வது படமாக தயாராகும் KH234 திரைப்படத்தில் இயக்குனர் மணிரத்னம் உடன் இணைகிறார் உலக நாயகன் கமல்ஹாசன். முன்னதாக கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக காலம் கடந்து நிற்கும் நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் மணிரத்னம் உலகநாயகன் கமல்ஹாசன் இணையும் KH234 படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் ராக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கமல் ஹாசனின் KH233 திரைப்படத்தை இயக்குனர் H.வினோத் இயக்குவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 52 ஆவது திரைப்படமாக உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தோடு இணைந்து டர்மரிக் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. RISE to RULE என்ற வாசகத்தோடு KH233 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவை பட குழு வெளியிட்டது. கையில் தீப்பந்தத்தோடு உலகநாயகன் கமலஹாசன் இருக்கும் அதிரடியான அந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் திரைப்படத்தின் முதற்கட்டமாக அதிரடி ஆக்ஷனில் இறங்கி இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் பிரத்தியேகமாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பல்வேறு ரகங்களில் மிரட்டலான உயர் ரக துப்பாக்கிகளில் உலகநாயகன் கமல்ஹாசன் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வீடியோவை தற்போது பட குழு வெளியிட்டுள்ளது. உலகநாயகன் கமல் ஹாசன் துப்பாக்கி சுடும் பயிற்சியின் மிரட்டலான அந்த வீடியோ இதோ…
 

Guts & Guns 🔥

Training Begins #FuriousAction in #KH233#Ulaganayagan #KamalHaasan #RKFI52 #RISEtoRULE@ikamalhaasan #Mahendran #HVinoth@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/Mec86yIhlh

— Raaj Kamal Films International (@RKFI) September 7, 2023