தளபதி விஜயின் லியோ பட 2வது பாடல் ரிலீஸ் எப்போது..?- ராக்ஸ்டார் அனிருத்தின் அதிரடி அறிவிப்பால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜயின் லியோ பட 2வது பாடல் அப்டேட் கொடுத்த அனிருத்,anirudh shared update of thalapathy vijay in leo movie second single | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட்டை அனிருத் பகிர்ந்தார். தளபதி விஜய் நடிப்பில் இதுவரை எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு பிறகு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் லியோ திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைத்தி ஆகியோர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களில் பணியாற்றியுள்ளனர். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த 2023 ஆம் ஆண்டில் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மிக முக்கிய திரைப்படங்களில் ஒன்றான லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. முன்னதாக சஞ்சய் தத் நடித்துள்ள ஆண்டனி தாஸ் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ள ஹெரால்டு தாஸ் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோவாக லியோ படக்குழு வெளியிட்ட மிரட்டலான GLIMPSE வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.  

எல்லாவற்றுக்கும் முன்பாக தளபதி விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்த லியோ படத்தின் முதல் பாடலான "நா ரெடி" பாடல் ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஹிட் ஆனது. மேலும் சமீபத்தில் யூட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை நா ரெடி பாடலில் லிரிக் வீடியோ கடந்துள்ளது. இதனிடையே லியோ திரைப்படத்தின் 2வது பாடல் குறித்த அப்டேட் தற்போது வெளிவந்துள்ளது. ஏற்கனவே லியோ திரைப்படம் கைதி படம் போன்ற ஒரு படம் என்றும் இதில் பாடல்கள் எல்லாம் பெரிதாக இல்லை இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் ரிலீசுக்கு முன்பாக வெளிவரலாம் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்த நிலையில், தற்போது அது குறித்த முக்கிய தகவலை இசையமைப்பாளர் அனிருத் பகிர்ந்து கொண்டார். ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு கண்டு களித்த அனிருத் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் லியோ படத்தின் 2வது பாடல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது “இன்னும் ஒரு வாரத்தில் அது குறித்த அப்டேட் வரும்” என தெரிவித்திருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லியோ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்திருக்கின்றனர்.