"ஒரு கலக்கு கலக்கும் பாருங்கள்!"- ஆஸ்கார் வின்னர் MMகீரவாணியுடன் ஜென்டில்மேன் 2 பாடல்கள் கம்போசிங்... வைரமுத்து கொடுத்த சூப்பர் அப்டேட்!

MMகீரவாணியுடன் ஜென்டில்மேன் 2 பாடல்கள் கம்போசிங்கில் வைரமுத்து,Gentle man 2 movie song composing on full swing mm keeravani vairamuthu | Galatta

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் பாடல்கள் கம்போசிங்கில் ஆஸ்கார் விருது பெற்ற MM.கீரவாணியுடன் இணைந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து ஸ்பெஷல் அப்டேட் ஒன்றை பகிர்ந்து உள்ளார் இந்திய சினிமாவில் மிக முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் அவர்கள் ஆரம்ப கட்டத்தில் மலையாளத்தில் பல படங்களை தயாரித்தார். பின்னர் 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த வசந்தகால பறவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கிய K.T.குஞ்சுமோன் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு மீண்டும் இயக்குனர் பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சூரியன் திரைப்படத்தையும் தயாரித்தார். அடுத்ததாக தற்போதைய இந்திய சினிமாவில் பல இயக்குனர்களுக்கு முன்னோடியாகவும் பிரம்மாண்ட படைப்புகளை கொடுக்கும் நட்சத்திர இயக்குனராகவும் திகழும் இயக்குனர் ஷங்கர் அவர்களின் முதல் படமான ஜென்டில்மேன் திரைப்படத்தை 1993 ஆம் ஆண்டு K.T.குஞ்சுமோன் அவர்கள் தயாரித்தார். 

தொடர்ந்து 2வது முறையாக இயக்குனர் ஷங்கருடன் இணைந்து, ஷங்கரின் இரண்டாவது படமாக வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான காதலன் திரைப்படத்தையும் தயாரித்த K.T.குஞ்சுமோன், தமிழ் சினிமாவிற்கு தரமான காதல் படங்களை கொடுத்த இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் தேசம் திரைப்படத்தை தயாரித்தார். தொடர்ந்து நாகார்ஜுனா நடிப்பில் தயாரான ரட்சகன் திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கிய K.T.குஞ்சுமோன், கடைசியாக கடந்த 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நிலாவே வா மற்றும் என்றென்றும் காதல் ஆகிய படங்களை தயாரித்த பின்னர் திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்தியிருந்தார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை தயாரிப்பதாக K.T.குஞ்சுமோன் அவர்கள் அறிவித்தார். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் தயாரிப்பாளராக மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுக்கும் K.T.குஞ்சுமோனின் இந்த ஜென்டில்மேன் 2 திரைப்படத்தை இயக்குனர் A.கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். 

நடிகர் சேர்த்தன் சீனு கதாநாயகனாக நடிக்கும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்தில் பிரபலமான நடிகைகளான நயன்தாரா சக்கரவர்த்தி மற்றும் பிரியா லால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் அஜயன் வின்சென்ட் அவர்கள் ஒளிப்பதிவு செய்யும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்திற்கு கலை இயக்குனராக தோட்டா தரணி அவர்கள் பணியாற்ற இருப்பதாக தெரிகிறது. மேலும் ஜென்டில்மேன் 2 திரைப்படத்திற்கு சமீபத்தில் இயக்குனர் SS.ராஜமௌலி அவர்களின் RRR திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது வென்ற இசை அமைப்பாளர் MM.கீரவாணி அவர்கள் இசையமைக்கிறார் வைரமுத்து அவர்கள் பாடல்களை எழுதுகிறார். இந்த நிலையில்  ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் பாடல் கம்போசிங் பணிகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐதராபாத்தில் இருக்கிறேன் ஜென்டில்மேன் 2 படத்திற்கான பாடல் புனைவு நடந்து கொண்டிருக்கிறது கே.டி.குஞ்சுமோனுக்கு வாக்களித்தபடி இந்த வாரம் மொத்தப் பாடல்களையும் முடித்துக்கொடுப்போம் கீரவாணியின் இசைக்கு வயது 20 நம் தமிழுக்கு வயது 18 காத்திருங்கள் ஒரு கலக்குக் கலக்கும் பாருங்கள்” என பதிவிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ இதோ…

 

ஐதராபாத்தில் இருக்கிறேன்

ஜென்டில்மேன் 2
படத்திற்கான பாடல் புனைவு
நடந்து கொண்டிருக்கிறது

கே.டி.குஞ்சுமோனுக்கு
வாக்களித்தபடி
இந்த வாரம்
மொத்தப் பாடல்களையும்
முடித்துக்கொடுப்போம்

கீரவாணியின் இசைக்கு
வயது 20
நம் தமிழுக்கு
வயது 18

காத்திருங்கள்
ஒரு கலக்குக்
கலக்கும் பாருங்கள்… pic.twitter.com/Cal9Sy9tHt

— வைரமுத்து (@Vairamuthu) September 7, 2023