சீரியல் நடிகையாக களமிறங்கும் பிரபல தொகுப்பாளினி !
By Aravind Selvam | Galatta | October 19, 2021 12:26 PM IST
தமிழ் தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக முன்னணி நிறுவனமாக இருந்து வருவது சன் டிவி.தங்கள் சீரியல்கள் மூலமாகவும்,வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரசிகர்களை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக என்டேர்டைன் செய்து வருகிறது சன் டிவி.
குறிப்பாக பலரையும் கவரும்படி நெடுந்தொடர்களை ஒளிபரப்புவதில் சன் டிவிக்கு நிகர் எவரும் இல்லை.TRPயிலும் பல முன்னணி தொடர்கள் கலக்கி வருகின்றன.ட்ரெண்ட்டிற்கு ஏற்றவாறு புதிய சீரியல்களையும் ஒளிபரப்பி அசத்துவார்கள் சன் டிவி.சன் டிவியில் சமீபத்தில் ஒளிப்பரப்பை தொடங்கி அசத்தி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று தாலாட்டு.
கிருஷ்ணா,ஸ்ருதிராஜ் முன்னணி வேடங்களில் நடித்து அசத்தி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரை Shak ஸ்டுடியோஸ் தயாரித்து வருகின்றனர்.தற்போது சன் டிவியில் இதே தயாரிப்பு அருவி என்ற தொடரை தயாரித்துள்ளனர்.இந்த தொடர் சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கியது.
பூவே பூச்சூடவா தொடரில் நடித்த கார்த்திக் வாசு இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கிறார்.பூவே உனக்காக தொடரில் நடித்து பிரபலமான ஜோவிதா லிவிங்ஸ்டன் இந்த தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார்.அம்பிகா இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த தொடரில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக வேலைபார்த்து பிரபலமான சத்யா தேவராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த தொடர் மூலம் இவர் சீரியலில் என்ட்ரி கொடுக்கிறார்.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Ashok Selvan - Priya Bhavani Shankar's Hostel censored with U/A certificate!
19/10/2021 07:29 PM
Atharvaa's Kuruthi Aattam - power packed title song video is here | Check Out
19/10/2021 06:59 PM
Akash Puri's Romantic Movie - Intense TRAILER released | Watch Video Here!
19/10/2021 05:01 PM