தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்குமார் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆக தயாராகி இருக்கிறது துணிவு திரைப்படம். மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் அஜித் குமார் - இயக்குனர் H.வினோத் - போனி கபூர் - நீரவ்ஷா கூட்டணியில் மூன்றாவது திரைப்படமாக தயாராகி இருக்கும் துணிவு படம் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியிடாக ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகிறது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்த துணிவு படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் துணிவு படப்பிடிப்பு குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் நிறைய ஆக்சன் காட்சிகளில் அஜித்குமாருக்கு பதிலாக டூப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?  இது குறித்து இயக்குனர் H.வினோத்திற்கு பிறகு பதிலளிக்கக் கூடிய சரியான நபர் நீங்கள்தான்!! என அவரிடம் கேட்டபோது,

“ரொம்ப கஷ்டமா இருக்கு... அவருடைய எக்ஸ்பீரியன்ஸ்க்கு... அத ஒரு சாதாரணமான இடத்தில உட்கார்ந்து விமர்சனம் பண்றது... இவருக்குன்னு இல்ல எல்லாருக்குமே... எல்லாருமே கஷ்டப்படறதுக்கு தான் வராங்க… ஒரு அவுட்ட நல்லா கொடுக்கணும். சும்மா ஏமாத்தணும்னு யாருமே ஒர்க் பண்ணல. எல்லாருமே அந்த படத்தை ஒரு வெற்றி படமா குடுக்கணும் தான் ஹார்ட் வொர்க் பண்றாங்க… என் படத்துல பார்த்தீங்கன்னா நான் மேக்சிமம் டூப் இல்லாம தான் எடுப்பேன். அதே மாதிரி தான் அஜித் சாரும் இருந்தாரு!! நான் திரும்பவும் சொல்றேன் இதுல எங்கேயாவது ஒரு இடத்துல டூப் இருக்குன்னு மார்க் பண்ணி காட்ட சொல்லுங்க பாக்கலாம் 100% ஆக்ஷன் சீக்வன்ஸ் எல்லாத்தையும் அஜித் சார் தான் பண்ணாரு” என ஸ்டண்ட் இயக்குனர் சுப்ரீம் சுந்தர் தெரிவித்துள்ளார். மேலும் துணிவு படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் குறித்த பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட சுப்ரீம் சுந்தர் அவர்களின் முழு பேட்டி இதோ…