ஆகச்சிறந்த நடிகராக படத்திற்கு படம் தன்னை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி கொண்டே வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் இதுவரை இந்த ஆண்டில்(2022), மாறன், தி க்ரே மேன்(ஹாலிவுட்), திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக ராக்கி & சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அதிரடியான பீரியட் திரைப்படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் தனுஷ், தொடர்ந்து சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய, பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். 

முன்னதாக தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் வாத்தி (SIR). சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. J.யுவராஜ் ஒளிப்பதிவில், நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, வாத்தி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தனுஷின் வாத்தி திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்தையும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
 

Delighted to be associated with @SitharaEnts by releasing #Vaathi in Tamilnadu 😊

Happy in associating with @dhanushkraja sir .. More to come 😊#VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @Fortune4Cinemas #SrikaraStudios @adityamusic pic.twitter.com/CtXomVrWqB

— Seven Screen Studio (@7screenstudio) December 23, 2022