இந்திய அளவில் தற்போது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க இருக்கும் தளபதி67 திரைப்படம். சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பூஜை நிறைவடைந்த நிலையில், வாரிசு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்

இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரித்துள்ள வாரிசு திரைப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியிட அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.  

முன்னதாக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்த வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் மேயாத மான், ஆடை மற்றும் குலுகுலு படங்களின் இயக்குனரும், மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களின் வசனகர்த்தாவுமான இயக்குனர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஸ் கிடைச்சிருச்சு... தொடர்ச்சியாக இது ஆறாவது இசை வெளியீட்டு விழா... காத்திருக்க முடியவில்லை…” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தளபதி விஜயின் தீவிர ரசிகரான இயக்குனர் ரத்னகுமார் வாரிசு வெளியீட்டு விழா குறித்து பதிவிட்ட அந்த பதிவு இதோ…
 

Pass kedachiruchi 🥳.
For me it's Sixth Audio Launch in a Row 😍💥. Can't wait 🎉🎉.#Varisu#VarisuAudioLaunch https://t.co/C4zX1FIFJC

— Rathna kumar (@MrRathna) December 22, 2022