தனக்கே உரித்தான வசீகரமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை த்ரிஷா கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் - 1 திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் கனக்கச்சிதமாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தார். தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அதிரடி ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகி வரும் தி ரோட் திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நடிகை த்ரிஷா தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகும் ராம் - பார்ட் 1 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். முன்னதாக நடிகர் அரவிந்த்சாமி உடன் இணைந்து திரிஷா நடித்த சதுரங்க வேட்டை திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

இந்த வரிசையில் த்ரிஷா நடிப்பில் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கும் திரைப்படம் ராங்கி. இயக்குனர் A.R.முருகதாஸின் கதையில், எங்கேயும் எப்போதும் & இவன் வேற மாதிரி படங்களின் இயக்குனர் M.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள ராங்கி திரைப்படத்தில் அனஸ்வரா ராஜன், ஜான் மகேந்திரன், லிஸ்ஸி ஆண்டனி மற்றும் கோபி கண்ணதாசன் உள்ளிட்ட பலர் முக்கிய படங்களில் நடித்துள்ளனர்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அவர்கள் தயாரித்துள்ள ராங்கி படத்திற்கு KA. சக்திவேல் ஒளிப்பதிவில், M.சுபாரக் படத்தொகுப்பு செய்ய C.சத்யா இசையமைத்துள்ளார். பக்கா ஆக்ஷன் திரைப்படமாக ராங்கி திரைப்படம் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் ராங்கி திரைப்படத்தின் அதிரடியான ட்ரெய்லர் தற்போது வெளியானது. மாஸான அந்த ட்ரெய்லர் இதோ…