'செயின்ட் பிரிட்டோ அகாடமியின் 25 ஆண்டு சாதனை பயணத்தின் முக்கிய காரணம் இதுதான்!'- Dr.விமலா ராணி பிரிட்டோவின் சிறப்பு பேட்டி

செயின்ட் பிரிட்டோ அகாடமி Dr.விமலா ராணி பிரிட்டோவின் சிறப்பு பேட்டி,st brittos academy dr vimala rani britto special interview | Galatta

தமிழ்நாட்டில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் செயின்ட் பிரிட்டோ அகாடமி என்றும் அழியாத கல்விச் செல்வத்தை மிகச் சிறப்பாக வழங்கி வருகிறது. இந்த செயின்ட் பிரிட்டோ அகாடமியின் செயலாளராக விளங்குபவர் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்கள். தனது கணவரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் கெர்ரி இன்டெவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான சேவியர் பிரிட்டோவுடன் இணைந்து செயின்ட் பிரிட்டோஸ் அகாடமியை நிறுவிய டாக்டர் விமலா ராணி பிரிட்டோ அவர்கள் VKAN-V சொல்யூஷன்ஸ் தலைவராகவும், கெர்ரி இண்டேவ் லாஜிஸ்டிக்ஸ் இயக்குநராகவும், எஸ்தெல் ஹோட்டல் & ரிசார்ட்ஸின் நிர்வாக இயக்குநராகவும், எஸ்தெல் ஹோம்ஸின் இயக்குநராகவும் திகழ்கிறார். கடின உழைப்பின் அடையாளமாய் விளங்கும் மதிப்பிற்குரிய டாக்டர்.விமலா ராணி பிரிட்டோ அவர்களின் செயின்ட் பிரிட்டோ அகாடமி தற்போது வெற்றிகரமாக 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்தியேக பேட்டி கொடுத்த Dr.விமலா ராணி அவர்கள் நம்மோடு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் பேசிய போது, "இன்று சென்னையில் பார்த்தீர்கள் என்றால் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகளில் இப்போது எத்தனை பள்ளிகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை. உங்களுடைய பள்ளி தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளாக இருக்கிறது என்றால் அதற்கு பின்னால் ஒரு கடின உழைப்பும் பெரும் முயற்சியும் இருக்கும்… நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டபோது, 

“நிலைத்தன்மை தான்! அதாவது உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதில் ஆரம்பிக்கும் போதே நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும் நான் ஒரு பள்ளி துவங்க இருக்கிறேன் அந்தப் பள்ளி ஒரு நல்ல விஷயத்தை செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்க வேண்டும். என் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை என்னை மாதிரி கொண்டு வர வேண்டும் என்கிற ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். ஏனென்றால் நாங்களும் பார்த்தீர்கள் என்றால் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான். நாங்களும் மிடில் கிளாஸ் இருந்து வந்து ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு நல்ல நிலைக்கு வந்து நாமே ஒரு நான்கு பேருக்கு வேலை கொடுக்கக்கூடிய இடத்திற்கு வரும் போது நம் மீது நமக்கே அறியாமல் ஒரு நம்பிக்கை இருக்கும். மதுரையிலிருந்து தேவகோட்டையில் இருந்து வந்த ஒரு தம்பதி இந்த அளவுக்கு பண்ணும் பொழுது என் பள்ளியில் படித்த குழந்தைகள் அதே மாதிரி வளர்ந்து தொழிலில் முன்னிலைக்கு வருவதோ ஒரு நான்கு பேருக்கு நல்லது செய்வதோ ஏன் பண்ணக்கூடாது. நான் குழந்தையாக இருந்த சமயத்தில் இருந்து என் அப்பா சொல்லுவார். “நாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் பணம் இருக்க வேண்டும் என்று இல்லை கொடுக்கும் மனம் இருந்தால் போதும்” என அவர் சொன்னது என் மனதில் ஆழ பதிந்துவிட்டது”  என தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி சவால்கள் நிறைந்த தனது சாதனை பயணம் குறித்தும் இன்னும் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் Dr.விமலா ராணி பகிர்ந்து கொண்ட அந்த சிறப்பு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.