‘SJசூர்யா ஸ்டைலில் வசனம் பேசி கலக்கிய விஷால்!’- மார்க் ஆண்டனி பட அட்டகாசமான I LOVE U DI பாடல்… கலக்கலான வீடியோ இதோ!

விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட I love U Di லிரிக் வீடியோ வெளியீடு,vishal sj suryah in mark antony movie i love u di song out now | Galatta

விஷால் மற்றும் S.J.சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலிருந்து அட்டகாசமான 2வது பாடலாக I LOVE U DI பாடல் தற்போது வெளியானது. தனக்கென தனி பாணியில் வரிசையாக அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக அசத்தலான படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் தனது 34-வது திரைப்படமாக உருவாகும் புதிய #விஷால்34 திரைப்படத்தில் இயக்குனர் ஹரியுடன் இணைந்து இருக்கிறார். ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய  ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் 3வது முறையாக  இந்த கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்து இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என தெரிகிறது. இதனிடையே SJ.சூர்யா உடன் இணைந்து விஷால் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. தனக்கென தனி ஸ்டைலில் தொடர்ச்சியாக பல விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் SJ.சூர்யா அடுத்தடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் கேம் சேன்ஜராகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அதிரடி திரைப்படமாக தயாராகி இருக்கும் டபுள் எக்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து SJ.சூர்யா நடித்திருக்கிறார் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

இந்த வரிசையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முனனணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

சுவாரசியமான இந்த மார்க் ஆண்டனி படம் 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக  வரும் செப்டம்பர் 15ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் 2வது பாடலாக I LOVE U DI பாடல் தற்போது வெளியானது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த பாடலை பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கலக்கலான அந்த I LOVE U DI பாடல் இதோ…