“தளபதி68 அப்டேட் சீக்கிரம் சொல்றேன்!”- கௌதம் மேனனாக வெங்கட் பிரபு… ஜீவி பிரகாஷின் அடியே பட செம்ம SNEAK PEEK வீடியோ இதோ!

ஜீவி பிரகாஷின் அடியே பட SNEAK PEEK வெளியீடு,gv prakash kumar in adiyae movie sneak peek out now | Galatta

இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் மல்டிவர்ஸ் கான்செப்டில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்துள்ள அடியே படத்தின் SNEAK PEEK வெளியானது.  தமிழ் சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளர்களில் ஒருவராக தொடர்ந்து ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் இந்த 2023ம் ஆண்டில் இதுவரை வாத்தி, ருத்ரன், காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம், அநீதி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர், விஷாலின் மார்க் ஆண்டனி, இயக்குனர் பா.ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் தங்கலான், இயக்குனர் வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் வாடிவாசல், கார்த்தியின் ஜப்பான், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் SK21, அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 - அச்சம் என்பது இல்லையே, வாத்தி பட இயக்குனருடன் துல்கர் சல்மான் இணையும் புதிய படம், ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வரராவ், கங்கணா ரணாவத்தின் எமர்ஜென்சி, ஜெயம் ரவியின் சைரன், தங்கர் பச்சானின் கருமகன்கள் கலைகின்றன மற்றும் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ்குமார் இசையில் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜீவி பிரகாஷ் குமார் தொடர்ச்சியாக பல படங்களில் அசத்தி வருகிறார். அந்த வகையில், இடிமுழக்கம், 13, கள்வன், டியர், ரெபல் ஆகிய திரைப்படங்கள் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் ஏண்டா தலையில எண்ண வைக்கல மற்றும் திட்டம் இரண்டு ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கார்த்திக் விக்னேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் அடியே. மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வித்தியாசமான மல்டிபோர்ஸ் கான்செப்டில் பக்கா என்டர்டைனிங் திரைப்படமாக உருவாகி இருக்கும் அடியே திரைப்படத்தில் ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகை கௌரி கிஷன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடித்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், முத்தையன்.U படத்தொகுப்பு செய்ய, அடியே திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

தளபதி விஜயின் யோஹன் அத்தியாயம் ஒன்று, இந்திய பிரதமர் புரட்சி கலைஞர் விஜயகாந்த், ஏழு முறை ஐபிஎல் வென்ற RCB அணியின் கேப்டன் MSதோனி என ட்ரெய்லரிலேயே ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்த உள்ளிட்ட பல விஷயங்கள் கொண்ட பக்கா என்டர்டைனிங் படமாகவும் ரசிகர்களை கவரும் அத்தனை அம்சங்களும் நிறைந்த மல்டிவெர்ஸ் கான்செப்டில் வித்தியாசமான ஃபேண்டஸி படமாகவும் அதற்குள் அழகிய காதலும் இருக்கும் ரொமாண்டிக் படமாகவும் அடியே படம் இருக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி அடியே திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில் பேர்லல் யுனிவர்சில் இயக்குனர் “கௌதம் வாசுதேவ் மேனன்”-ஆக இயக்குனர் “வெங்கட் பிரபு” இருக்கும் வகையில் அட்டகாசமான ஒரு SNEAK PEEK வீடியோவை அடியே படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஜீவி பிரகாஷின் அடியே பட அட்டகாசமான SNEAK PEEK வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.